உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில வேதனையான நிகழ்ச்சிகள் - 5Ꮾ5 ஒன்று, தந்தை பெரியாருக்குத் தகவல் கொடுத்து அவர் உதவியுடன் வரவிருந்த தீங்கைத் தடுப்பது. = மற்றொரு வழி, பெருந்தலைவர் காமராஜரைக் காலதாமத மின்றிக் கண்டு முறையிட்டுக்கொண்டு, அவரைக்கொண்டு தடுப்பது மூன்றாம் வழி, இவர்கள் உதவியோடு தேவைப்பட்டால் வேறு சில பெரிய மனிதர்களின் உதவியை நாடுவது. m இம்மூன்ற் வழிகளும் எனக்குப் பிடிக்கவில்லை. மூன்றையும் ஒதுக்கிவிட்டேன். தாமரையிலைத் தண்ணிர் போல் இருக்கப் பக்குவப்படுத்திக் கொண்டேன். o மே திங்கள் 25 ஆம் நாள் இரவு ஒன்பதேகால் மணியிருக்கும். தெருக் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டிருந்தேன். அவ் வேளை ஐயா!' என்று குரல் கேட்டது, கதவைத் திறந்தேன். கோட்டையிலிருந்து ஆணை. உயர்கல்வி இயக்குநராக “கோட்டையிலிருந்து தங்களுக்கு அவசரக் கடிதம் கொண்டு வந்திருக்கிறேன்” என்று கூறிக்கொண்டே என்னிடம் கடிதத்தைக் கொடுத்தார் ஊழியர் ஒருவர். அவரை அனுப்பிவிட்டுக் கடிதத்தை உடைத்துப் பார்த்தேன், எதிர்பார்த்தது நடந்துவிட்டது. சென்னை மாநிலத்தின் தலைமைச் செயலர் திரு. டி. ஏ. வர்கீஸ், எனக்கு முழுபக்க நேர்முகக் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் 'நீங்கள் ஊர்தோறும் பள்ளிக்கூடம் வைத்துப் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய பணியை அரசு மெச்சுகிறது. "அதோடு கல்வி மேம்பாட்டுக்காக ஏழைக் குழந்தைகளுக்குப் பகல் உணவுத் திட்டம், இலவசச் சீருடைத் திட்டம், ஊரார் நன்கொடைகளைக் கொண்டு பள்ளிச்சீரமைப்பு இயக்கம் ஆகியவற்றைச் செம்மையாகச் செயல்படுத்தியதையும் அரசு பாராட்டுகிறது. 'அடுத்துக் கல்லூரிக் கல்வியையும் வளர்க்க உங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. _ 'அதில் நீங்கள் முழுநேரக் கவனம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும்பொருட்டு, உயர்கல்வி இயக்குநர் என்னும் புதிய பதவியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/604&oldid=788423" இலிருந்து மீள்விக்கப்பட்டது