பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

585 நினைவு அலைகள் இரண்டொரு நாள்களுக்குப் பிறகு திருச்சியிலிருந்த பெரியார், அலுவலகத்தில் இருந்த என்னோடு தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டார். “தாம் செலுத்த வேண்டிய ஐந்து லட்சம் ரூபாயை காசோலை யாக அனுப்புவதாகவும், அதை முதலமைச்சர் பெயருக்கு அனுப்புவா? இயக்குநர் பெயருக்கு அனுப்பவா?’ என்று வினவினார். “எவர் பெயருக்கு அனுப்பினாலும் ஒன்றுதான். ஆனால் ஒரு சிறு யோசனை. பெருந்தொகையை நன்கொடையாகத் தரும் ஐயாவுக்குத் தடையில்லை என்றால், அக் காசோலையை முதலமைச்சரிடம் நேரில் கொடுக்கும்படி ஏற்பாடு செய்யட்டுமா?” என்று கேட்டேன். - "இயக்குநர் விரும்புகிறபடி செய்யலாம். ஒரு சிறு தொல்லை. முதலமைச்சரைக் கோட்டைச் செயலகத்தில் காண்பது என்றால் பல படி ஏறவேண்டும். அது எனக்குத் தொல்லையாக இருக்கும்.” “முதலமைச்சரை அவர் இல்லத்தில் காண்பது என்றால் அது அவருக்குத் தொல்லையாக இருக்குமோ என்னமோ” என்று பெரியார் கேட்டார். “முதலமைச்சரை அவர் இல்லத்தில் காண்பதற்கு ஏற்பாடு செய்கிறேன். அவர் அதைத் தொல்லையாகக் கருத மாட்டார். “தயவுசெய்து தாங்கள் சென்னைக்கு வரக்கூடிய ஐந்தாறு நாள்களைக் குறிப்பிடுங்கள். அதில் ஒருநாள் தாங்கள் முதலமைச்சரைக் காண ஏற்பாடு செய்கிறேன்” என்றேன். பெரியார் தமக்கு நிகழ்ச்சிகள் இல்லாத நான்கு ஐந்து தேதிகளைக் குறிப்பிட்டார். “இது உங்கள் தகவலுக்கு முதலமைச்சருக்கு எப்பொழுது வசதிப்படுகிறதோ அப்போது வந்து காண்கிறேன்” என்று பெரியார். முடித்தார். முதலமைச்சரைக் கண்டேன். நடந்ததைக் கூறினேன். அடுத்த சில நாள்களுக்குள்ளேயே ஒரு நாளைக் குறிப்பிட்டார். அன்று காலை ஒன்பது மணிக்குப் பெரியார் தம்முடைய இல்லத்திற்கு வரலாம் என்று கூறினார். “அந்த நாளும், நேரமும் பெரியாருக்கு ஒத்து வரவில்லை. என்றால், வேறு நாள் கொடுக்கிறேன்” என்று கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/605&oldid=788424" இலிருந்து மீள்விக்கப்பட்டது