பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்கெதிராகச் சதி செய்தார் 589 அதற்காகக் கட்டடம் வியக்கத்தகு வகையில் விரைவில் கட்டி முடிக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டில் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா ஆண்கள் கல்லூரி முறைப்படி தொடங்கப்பட்டது. பெரியாருக்கு இடமில்லை அப்போதும் பழைய சினம் தணியாத முதலமைச்சர் என்னை அவ்விழாவிலிருந்து ஒதுக்கி வைக்கக் கருதினார். கல்வித் துறையின் பொறுப்பில் விழாவிற்கு ஏற்பாடு செய்ய விடாமல் மாவட்ட ஆட்சித் தலைவரின் பொறுப்பில் ஏற்பாடுகளைச் செய்யும்படி கட்டளை இட்டார். ஆட்சித் தலைவர் அரசின் ஆணைப்படி அவ் விழாவிற்குப் பெரியாரை அழைத்தார். ஆனால், பல ஏக்கர் நிலத்தையும், ஐந்து லட்சம் ரூபாயையும் நன்கொடையாகத் தந்த பெரியாருக்கு நிகழ்ச்சி நிரலில் இடம் கொடுக்கவில்லை. முதல் முறையாகப் பெரியார் ஊமையாக அமர்ந்து இருக்க நேர்ந்தது. பெரியார், தனிப் பெருந்தன்மையோடு அதைப் பொறுத்துக் கொண்டாலும், பொது மக்களிடையே அது எரிச்சலை வளர்த்ததை ஆட்சியில் இருந்தவர்கள் உணரவில்லை. 62. எனக்கெதிராகச் சதி செய்தார் முதலமைச்சர் மொட்டைக் கடிதம் எழுதத் துண்டினார் சில வாரங்களுக்குப் பிறகு சென்னை மாநில ஆரம்ப ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலரான மாஸ்டர் ராமுண்ணியும் வேறு சிலரும் மீண்டும் என்னைத் தேடி என் அலுவலகம் வந்தனர். "ஐயா, மிகத் தயக்கத்தோடு இன்று உங்களிடம் வந்திருக் கிறோம். மிக வேதனையோடு ஒரு தகவலைச் சொல்ல வேண்டியிருக்கிறது. தாங்கள் அதற்காக மனம் புண்பட வேண்டாம். “தங்கள் பேரில் புகார் சொல்லி, மொட்டைக் கடிதம் ஒன்றை அனுப்பும்படி முதலமைச்சரே பள்ளிக்கல்வி இயக்குநரிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/608&oldid=788427" இலிருந்து மீள்விக்கப்பட்டது