பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 நினைவு அலைகள் கூறியதாகப் பிந்தியவர் எங்களிடம் சொன்னார். அப்படி ஒரு கடிதம் அனுப்ப முடியுமா என்று கேட்டார். 'அந்த உத்தமர் பேரில் அப்படி வீண்பழி சுமத்தினால் அழிந்து போவோம். 'முதலமைச்சர் சினம் கொண்டிருந்த போது அப்படிச் சொல்லியிருந்தாலும் நீங்கள் அவருடைய சினம் குறையும்வரை காத்திருந்து மெல்லத் தணியவைக்க வேண்டும்’ என்று அவருக்குப் பதில் கூறினோம். “வாய்மை வெல்லும் என்பதை நாங்கள் நம்புகிறோம். எந்தத் தொடக்கப் பள்ளி ஆசிரியரும், எந் நிலையிலும் தங்கள் பேரில் அவதுாறு எழுத மாட்டார்கள் என்பது உறுதி. "இருந்தாலும் இப்படி ஒரு சதி கருக் கொள்வதைத் தங்களுக்குத் தெரியப்படுத்தவே இதைத் தங்கள் காதில் போட்டு வைக்கிறோம்” என்று அவர்கள் தயங்கித் தயங்கிக் கூறினார்கள். நான் அதிர்ச்சி அடையவில்லை. வேதனைப்படவும் இல்லை. ஏற்கெனவே இருமுறை காவல்துறை அலுவலர்களுக்கு வழக்குகளைப் புனைந்து போடும்படி கூறியபோது, என் காதாரக் கேட்டுள்ளேன். 'அரசியல் காழ்ப்புக்குத்தான் பொய் வழக்கின் மூலம் பழி வாங்கும் வழி செய்வார்கள் என்று அப்போது எண்ணிக் கொண்டேன். 'நேர்மையான அலுவலர்கள் பேரிலும் பொய் வழக்கு ஜோடனை செய்யப்படும்’ என்பதை அன்றுதான் உணர்ந்தேன். மடியில் கனமிருந்தால் அல்லவா வழியில் அச்சம்! இந்தச் செய்தியைக் கேட்ட இரண்டொரு நாள்களுக்குப் பிறகு முதலமைச்சரை அலுவல் பற்றிக் காண நேர்ந்தது. நேரிலேயே கேட்டேன் முதலில் கோப்புகளைப் பற்றிப் பேசி முதலமைச்சரின் முடிவுகளைக் குறித்துக் கேட்டேன். இறுதியில், 'ஐயா, நான் ஒரு வேதனையான செய்தியைக் கேள்விப் பட்டேன். அது பொய்ய்ாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால் மனம் புண்படாமல் என்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன் “தாங்கள். என் பேரில் புகார் சொல்லும் மொட்டைக் கடிதம் ஒன்றை வாங்கி அனுப்பும்படி தன்னிடம் சொன்னதாக இயக்குநர் சில ஆரம்ப ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/609&oldid=788428" இலிருந்து மீள்விக்கப்பட்டது