பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- எனக்கெதிராகச் சதி செய்தார் 591 சிலையானார் “என்னைத் தாங்கள் அறிந்த அளவு வேறு எவரும் அறிந்ததில்லை. தங்கள் மனச்சாட்சிப்படி, நான் ஏதேனும் சி றுபிழை செய்திருந்தாலும் அதற்குப் பெருந்தண்டனை கொடுங்கள். 'கோபத்தால் எதையும் செய்யவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்று பணிவோடு கூறினேன். முதலமைச்சர் சிலைபோல் விற்றிருந்தார். சினம் கொள்ளவும் இல்லை. என் கூற்றை மறுக்கவும் இல்லை. சில வினாடிகள் சும்மா இருந்தேன். பிறகு முதலமைச்சரிடம் அவரைச் சங்கடப்படுத்தியற்கு மன்னிப்புக் கோரி விட்டு விடைபெற்றேன். சிந்தனையில் கலந்த நஞ்சு வேலை செய்தது. பொய்ப் புகார் துணைப்பாட நூலுக்கு முயன்று தோல்வி கண்ட ஆசிரியர் ஒருவர், நான் ஏதோ ஒரு குறிப்பிட்ட வெளியீட்டு நிறுவனத்திற்கு நிறையச் சலுகை காட்டியதாக, முதலமைச்சரிடம் நேரில் கூறினார். அதைப் பற்றி ஆய்வு நடந்தது. முடிவு என்ன? 'நான் பொதுக்கல்வி இயக்குநராய் இருந்த பதினோரு ஆண்டுக்காலத்தில் ஒருமுறைகூட மேற்படி நிறுவனத்திற்குப் பள்ளி இறுதித் துணைப்பாட நூல் கிடைக்கவில்லை; வேறு சலுகைகளும் கிடைக்கவில்லை என்று வெளியாயிற்று. சில திங்கள் ஓடின. 1966ஆம் ஆண்டு இறுதியில், சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில், சென்னை மாநில இந்திய சோவியத் பண்பாட்டுக் கழக மாநில மாநாடு, நடந்தது. அதில், "சோவியத் கல்வி பற்றி உரையாற்ற திரு. மோகன் குமாரமங்கலம் என்னை அழைத்தார். நான் இசைந்தேன். என்னுடைய உரையைத் தட்டச்சு செய்து முன் கூட்டி அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். அப்படியே செய்தேன். அம் மாநாடு முடிந்த சில நாள்களில் கல்விச் செயலரிட மிருந்து எனக்கு நேர்முகக் கடிதம் ஒன்று வந்தது. சோவியத் பண்பாட்டுக் கழக மாநாட்டில் நான் உரையாற்றும்போது ஆதாரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/610&oldid=788430" இலிருந்து மீள்விக்கப்பட்டது