பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 நினைவு அலைகள் o பெரியாரின் மகிழ்ச்சி "பெரியார் மன்றத்தில் தங்கியிருந்த பெரியாரை நான் சென்று கண்டபோது அவர் பூரித்துப் போனார். m அவரது ஆணைப்படி, பொதுக்கல்வி இயக்குநர் ஆன54 முதல் அவரைத் தனியே காண்பதை அநேகமாகத் தவிர்த்து வந்தேன். அங்குப் பெரியாரைக் காண வந்திருந்த நக்ரமன்றத் தலைவர் மற்றும் நகரப் பிரமுகர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்துப் ட்யுகழ்ந்துரைத்தார். - - கல்லூரி விழாவிற்கு முன்பு சிறப்பான தேநீர் விருந்து ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட பெரியவர்களுக்குப் பெரியாரே என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஒவ்வொருவரிடமும் என்னை, "நம்ம டைரக்டர்” என்று மகிழ்ச்சி பொங்க அறிமுகம் செய்தபோது, அவர் கண்கள் மகிழ்ச்சியால் சுடர்விட்டன. கடவுள் வாழ்த்து கல்லூரி விழா குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கியது. நிகழ்ச்சி நிரலைப் பார்த்தேன். ‘கடவுள் வாழ்த்து’ என்பது முதல் நிகழ்ச்சி. அடுத்ததைப் படிப்பதற்கு முன் பெரியார், கடவுள் வாழ்த்து என்று அறிவித்துக் கொண்டே எழுந்து கைத்தடியை ஊன்றிய படியே நின்றார். அனைவரும் எழுந்து நின்றனர். l மாணவர்கள் சிலர் ஒலிபெருக்கி அருகில் வந்து, கடவுள் வாழ்த்துப் பாடினர். பாடி முடித்தபிறகே, பெரியார் இருக்கையில் அமர்ந்தார். o மரபுப்படி, வரவேற்பு இதழ் வாசித்து அளிக்கப்பட்டது. வரவேற்புரை நிகழ்ந்தது. கல்லூரி அறிக்கை படிக்கப்பட்டது. பெரியாரின் தலைமையுரை பெரிய்ார் தலைமையுரை ஒரு மணிநேரம் போல் நீண்டது. . "காலம் காலமாகக் கல்வியையே மறந்திருந்த தமிழ் மக்களுக்குக் கல்விக்கண்ண்ைத் திறந்தவர் கல்வி வள்ளல் காமராசர். - o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/613&oldid=788433" இலிருந்து மீள்விக்கப்பட்டது