உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SlufflurGI-súr ஒரே மேடையில் பேசினேன் 595 “காமராசரின் நல்வாய்ப்பு அவருக்கு ஐயா நெ. து. சு. இயக்குநராகக் கிடைத்தார். “முதலமைச்சர் நினைத்த ஒவ்வொன்றையும் இயக்குநர் விரைந்து செயல்படுத்தி நிறைவேற்றித் தந்தார். "இருவருமே கல்வி வள்ளல்கள்தான். “அடுத்து வந்த முதலமைச்சரான மாண்புமிகு பக்தவத்சலம், காமராசர் தொடங்கிய இலவசக்கல்வி திட்டத்தை நிறைவு செய்து வைத்தார். “ஏற்கெனவே தொடங்கிய இலவசப் பகல் உணவு, இலவசச் சீருடை ஆகியவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். 'பக்தவத்சலமும் ஒரு கல்வி வள்ளலே’ என்று பெரியார் இரு முதலமைச்சர்களையும், என்னையும் இணைத்துப் புகழ்ந்தார். மாணவர்கள் இடையே பட்டாளத்துக் கட்டுப்பாடு தேவை என்று வலியுறுத்தினார். என் பெயரில் அறக்கட்டளை . கற்கும் பருவத்தில் கல்வியின்பாலே முனைப்பாய் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். என் பெயரில் அறக்கட்டளை நிறுவினார். இறுதியாக, * “நம் இயக்குநர் ஐயா நெ. து. சு. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் ஆற்றியுள்ள பணி மிகப் பெரிதாகும். “அதைப் பாராட்டும் வகையில் எவ்வளவு சிறப்புச் செய்தாலும் தகும். “ஏதோ சிறு அடையாளமாக, இச் சிறு நன்கொடையைத் தாளாளரிடம் அளிக்கிறேன். "அதை முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு ஆண்டுதோறும், இயக்குநர் நெ. து. சு. பகுத்தறிவுப் பரிசுகள்’ என்ற பெயரில், கட்டுரைப் போட்டி நடத்தி, பரிசளிக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்” என்று சொல்லியவாறே தம் பைக்குள் இருந்து ஒரு கத்தை நோட்டுகளைத் திரு. சிக்கைய நாயக்கரிடம் பெரியார் அளித்தார். சிக்கைய நாயக்கர் நன்கொடையை எண்ணிப் பார்த்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/614&oldid=788434" இலிருந்து மீள்விக்கப்பட்டது