உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

595 நினைவு அலைகள் 'ஆயிரம் ரூபாய்கள் அறக் கட்டளைக்குக் கொடுத்து இருக்கிறார். அது இலட்ச ரூபாய்க்குச் சமம்” என்று அறிவித்தார். அவையோர் அனைவரும் கையொலி எழுப்பிப் பாராட்டினர் பெரியார் நிறுவிய பரிசு அறக்கட்டளை இது ஒன்றுதான். அதைப் பெரியார் அறிவித்தபோது நான் மகிழ்ச்சிக் கடலின் மூழ்கிவிட்டேன். தன்நிலை பெற எனக்குச் சில மணித்துளிகள் ஆயின பெரியாரின் பெருமை அடுத்து நான் உரையாற்ற வேண்டிய முறை வந்தது பெரியார் அன்று விழாவை நடத்தின முறையே என் பேச்சுக்கு அடி எடுத்துக் கொடுத்தது. "தந்தை பெரியார் நாடறிந்த நாத்திகர் ஆவார்.அவரால் ஆய்வ செய்யப்படாத கோட்பாடுகளோ, கண்டிக்கப்படாத பெரிய மனிதர்களோ கிடைப்பது அரிது. "அப்படிப்பட்ட நாடறிந்த நாத்திகர் தலைமை தாங்கி நடத்தும் கல்லூரியில் நாள்தோறும் கடவுள் வாழ்த்து நடைபெறுவது, நீங்களனைவரும் அறிந்ததே “பெரியார் தலைமை தாங்கும் கல்லூரி விழ்ாவிலும், கடவுள் வாழ்த்தோடுதான் நிகழ்ச்சிகள் தொடங்கின. = "தமது முதுமையையும் பொருட்படுத்தாமல், பெரியார் கடவுள் வாழ்த்தின்போது எழுந்து நின்று, மரியாதை செய்த பண்பை உங்கள் தனிக்கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன் 'உணர்ந்ததை உணர்ந்தவாறே உரைப்பதே மாமனிதருக்கு அடையாளம் ஆகும். “பெரியார் என்கிற மாமனிதர் கடவுள் நம்பிக்கை அற்றவர். "அத்தகைய நம்பிக்கை பல கேடுகளுக்கு ஊற்றாகப் பயன்படுகிறது என்ற முடிவுக்கு வந்தவர் “மனிதகுல மேம்பாட்டிற்காக, மேற்படி கொள்கைகள் இரண்டையும் உலகறியச் சொல்ல வேண்டும் என்ற உறுதி உள்ளவர். "அப்படி உரைப்பது தமது உரிமையும், கடமையும் ஆகும் என்று பெரியார் நம்பிச் செயல்படுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/615&oldid=788435" இலிருந்து மீள்விக்கப்பட்டது