பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600 நினைவு அலைகள் பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக, ராஜாஜி யிடமிருந்து பிரிந்துவிட்டபோது, ராஜாஜியைப் பலமுறை கடுமையாக எதிர்த்து வந்தார். இருப்பினும், இவர்களுக்கிடையில் ஊடுருவியிருந்த பற்றும், பாசமும், மதிப்பும் சிறிதும் குறையவில்லை. கடைசிவரை, பெரியார் ராஜாஜியிடம் தனி மதிப்பு வைத்திருந்தார். கொண்ட கொள்கையிலே ஆழமான பிடிப்பு: அதே நேரத்தில் மாற்றாரின் தன்னல மறுப்பையும் திறமையையும் சீலத்தையும் பெரிதாக் மதிக்கும் மனிதப்பண்பு இவ்விரண்டும் இணைந் திருந்தால்தான் நாம் காந்தியடிகளை, பண்டிதர் ஜவகர்லால் நேருவை, இராஜாஜியை, பெரியாரை, காமராசரை, அண்ணாவைப் போன்ற உயர்ந்தோரைப் பெற முடிந்தது. எதிர்காலத்தில் இவ்விரு பண்புகளும் எந்த அளவிற்கு இணைந்து செயல்படுகிறதோ அந்த அளவுக்கு நாடு உயரும். மெமோ கொடுத்தார்கள் இப்போது என் கதைக்கு திரும்புவோம்; மேற்படி கல்லூரி விழா முடிந்து, இரண்டு மூன்று வாரங்கள் ஆகியிருக்கும். அப்போது, சென்னைக் கோட்டையில் இருந்து நீண்டநேர்முக இரகசியக் கடிதம் ஒன்று, எனக்கு வந்து சேர்ந்தது. உடைத்துப் பார்த்தேன். அதிலிருந்த பச்சைப் பொய்யைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். “நீங்கள் அண்மையில் ஈரோட்டில் பெரியார் ஈ. வெ. ராம சாமியின் பிறந்தநாள் விழாவிலே கல்ந்துகொண்டு, அவரைப் பாராட்டியுள்ளதாக அரசுக்குத் தகவல் வந்துள்ளது. --- 'சர்ச்சைக்கு உரிய ஈ. வெ. ராவின் பாராட்டு விழாவிலே நீங்கள் கலந்து கொண்டது முறையல்ல; ஏன் அப்படிக் கலந்து கொண்டீர்கள் என்பதற்கு விளக்கம் அறிய அரசு விரும்புகிறது. விரைவில் இது பற்றிய உங்கள் விளக்கத்தை அனுப்பி வைக்கவும்.' என் மறுப்பு பெரியாரின் பிறந்தநாள் விழாவில், அதுவரை நான் கலந்து கொண்டதே இல்லை. காரணம், பெரியார் அவர்களே எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/619&oldid=788439" இலிருந்து மீள்விக்கப்பட்டது