உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மணிகள் மூவர் 601 அப்படி ஒரு தடை விதித்து இருந்தார். அதைச் சிறிதும் தவறாது நான் பின்பற்றி வந்தேன். 1969ஆம்ஆண்டில் நான் அரசுப் பணியில் இருந்து ஒய்வு பெற்று, சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுப் பேற்ற பிறகுதான், திருச்சியில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில், முதன்முறையாகக் கலந்து கொண்டேன். கனவிலும், மறைந்து ஒழுகி அறியாத என் பேரில் இப்படியொரு பொய்த் தகவல் வரும் என்றால், அது நம்மிடையே வாய்மையின்மை பரவலாகப் படர்ந்திருப்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது. அரசுக்குப் பதில் எழுத வேண்டுமே. உடனுக்குடன் பதில் எழுதினேன். குற்றச் சாட்டை மறுத்தேன். அது முழுக்க முழுக்கப் புனைந்துரை என்றேன். விசாரணைக்கும் ஆயத்தமாக இருப்பதாக எழுதினேன். பதில் ஏதும் வரவில்லை. ஆகாத அலுவலர்களை மிரட்ட, திரட்டப்பட்ட பூச்சாண்டிகளில் இதுவும் ஒன்று.போலும்! 64. பெண்மணிகள் மூவர் அன்னை செலின் மறைந்தார் நெஞ்சை நெகிழ்விக்கும் சில நினைவுகள் இப்போது அலை மோதுகின்றன. அவற்றைக் கூறிவிட்டு என் கதையைத் தொடர்கிறேன். சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியில், ‘சர்ச் பார்க்' வளாகத்தில் புனித இருதய கான்வென்ட் என்ற மெட்ரிக்குலேசன் பள்ளியொன்று நடைபெறுகிறது. தவத்திரு அன்னை செலின் அதன் தலைமை ஆசிரியையாகப் பல்லாண்டு பணி புரிந்தார். அப் பள்ளிக்கூடம் கல்வித் துறையின் கண்காணிப்பில் இல்லை. சென்னைப் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/620&oldid=788441" இலிருந்து மீள்விக்கப்பட்டது