பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 நினைவு அலைகள் . இருப்பினும், தனிப்பட்ட முறையில் அன்னை செலின் என்பாலும், என் குடும்பத்தின்பாலும் பெரிதும் பற்றுக் கொண்டிருந்தார்கள். என் மனைவி காந்தம்மா, அடிக்கடி மேற்படி அன்னையாரைக் கண்டு அளவளாவுவார். அந்தப் பள்ளியில் காந்தத்தின் செல்வாக்கு அதிகம். பலருக்கு இடம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அத்தனை பேரும் வளர்ந்து முன்னுக்கு வந்து நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியதாம். அன்னை செலின் புற்றுநோய்க்கு ஆளானார். வேலூர் கிறித்தவ மருத்துவ மனைக்குச் சென்று அறுவை மருத்துவம் செய்து கொண்டார். அச் செய்தி கேட்டதும், நானும் காந்தமும் வேலூர் சென்றோம். அன்னையர்ரைக் கண்டு நலம் விசாரித்தோம். கவலையோ, வருத்தமோ சிறிதும் இல்லாமல் அன்னையார் எங்களோடு அளவளாவினார். - சில நாள்களுக்குப்பின் மருத்துவர் ஆலோசனைப்படி அன்னை செலின் சென்னைக்குத் திரும்பினார். சென்னையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தபோதும், நாங்கள் அன்னையாரைக் கண்டு உரையாடும் வாய்ப்பு பெற்றோம். ஒரு முறை அன்னை செலின். என்னையும் என் மனைவியையும் கண்டு பேச விரும்புவதாகச் செய்தி வந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சென்று கண்டோம் மகிழ்ச்சியோடு வரவேற்றார். வேதனையான செய்தி ஒன்றைக் கூறினார். “என் புற்றுநோய் முற்றிவிட்டது, இனி குணமாகாது. எனவே, விரைவில் நான் இறைவனோடு கலந்து விடுவேன். என்னுடைய தலைமைக் குருவின் அனுமதி பெற்று, உங்கள் இருவரையும் என்னுடைய அறையிலேயே பேட்டி காண்கிறேன். என்னை எண்ணித் துதியுங்கள். - “நான் வந்த வேலை முடிந்துவிட்டது. எல்லா நிலையிலும் முழுப் பற்றுதலோடு பணியாற்றி இருக்கிறேன். உளமார பிழை ஒன்றும் செய்ததில்லை. எனவே, கர்த்தரிடம் கலந்துவிடுவேன். “காந்தம்! உனக்கு முன்னே, உன் திருவள்ளுவனை நான் சந்திப்பேன் என்பதிலே எனக்குப் பெருமகிழ்ச்சி”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/621&oldid=788442" இலிருந்து மீள்விக்கப்பட்டது