உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மணிகள் மூவர் 503 இந்தப் பாணியில் அன்னை செலின் பேசினார். அவர் குரலில் ஏக்கமோ, வருத்தமோ, கவலையோ தொனிக்கவில்லை. நல்வாழ்வு வாழ்ந்தோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இருந்து பிறக்கும் உறுதியினையும், அமைதியையுமே உணர்ந்தோம். ரு மணிக்கு மேலாக அன்னையாரோடு பேசினோம். விடை கொடுக்கும்போதும், மாறி மாறி எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு வாழ்த்தினார்கள். ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த செலின் அன்னை, தமிழர்களாகிய எங்கள்பால் இப்படிப் பற்றுக்கொள்ளக் காரணம் என்ன? அன்னையாருக்கு இந்திய விடுதலையின்பால் பற்று உண்டு. இந்தியா விடுதலை பெற்றபின்னர், கல்வி மேம்பாட்டிற்காக நாம் மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டு பாராட்டினார். கல்வி மேம்பாட்டின் கூறாகப் பகல் உணவுத் திட்டம், சீருடைமுறை, பள்ளிச் சீரமைப்பு இயக்கம், மேற்பார்வைப் படிப்பு முறை, ஞானத்தந்தை திட்டம் முதலியவற்றைச் செயல்படுத்தியபோது, இவற்றை வரவேற்று உணர்வுபூர்வமான ஆதரவை நல்கினார். அன்னை செலின் எனது தொண்டினைப் பாராட்டி, காந்தம்மாவிடம் புகழ்ந்து உரைக்க ஒருமுறையும் தவறியதே இல்லை. நாங்கள் கண்டு உரையாடிவிட்டு வந்த சில நாள்களுக்குப் பிறகு அன்னை செலின் அமைதியில் ஆழ்ந்துவிட்டார். மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்ட அன்னைக்கு நாங்கள் இருவரும் கண்ணிர் அஞ்சலி செலுத்தினோம் அவருடைய மறைவு எங்களுக்குப் பேரிழப்பு. அன்னை செலினின் நினைவாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் அறக்கட்டளை ஒன்றை எங்கள் சொந்தச் செலவில் நிறுவி, அதன்மூலம் கிடைக்கும் வட்டியைக் கொண்டு, மெட்ரிக்குலேசன் தேர்வில் முதலிடம் பெறுபவருக்குப் பரிசளிக்க ஏற்பாடு செய்ததே எங்கள் இருவரின் எளிய காணிக்கை. --- நல்லதைப் போற்றினார் 1964இல் அமெரிக்கா சென்று கல்வி நிலையங்களைப் பார்த்துவிட்டுத் தாயகம் திரும்பியதும் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரிக்கு நான் அலுவல் பற்றிச் செல்ல நேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/622&oldid=788443" இலிருந்து மீள்விக்கப்பட்டது