உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 நினைவு அலைகள், அங்குப் பெரியதொரு சீருடை வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஊரின் நுழைவாயிலில் இருந்து விழா மேடைவரை என்னை ஜீப்பில் ஊர்வலாக அழைத்துச் செல்லத் திட்டமிட்டு இருந்தார்கள். ஊர்வலம் எனக்குப் பிடிக்கவில்லை. எனினும், ஆசிரியர் களுக்கும் நிர்வாகிகளுக்கும் தாட்சண்யப்பட்டு, அவர்கள் திட்டமிட்ட தொலைவிற்கு நடந்தே சென்றேன். வழி நெடுகிலும் பொதுமக்கள் ஆணும் பெண்ணும் குழுமியிருந்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். வழியில் ஒர் அய்யங்கார் அம்மையார் மூன்று வயதுக் குழந்தையோடு நின்று கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும், பிறரைப் போலவே தானும் வணங்கி விட்டு, "பாப்பா, அய்யாவைக் கையெடுத்துக் கும்பிடு. அவர்தான் நாமெல்லாம் படிக்க இலவசக் கல்வி கொண்டு வந்தவர். இவர் நன்றாயிருக்க வேண்டுமென்று கும்பிடு” என்று தன் குழந்தைக்கு ஆணையிட்டார். அக் கும்பிடு எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. காரணம்? இலவசக் கல்வித் திட்டத்திற்கான பெருமை முதலமைச்சர் காமராசருக்கும், முதலமைச்சர் பக்தவச்சலத்துக்கும் சேரும். அதில் நான் ஆற்றியது தினையளவே! -- கல்வியின் அருமையையும் பெருமையையும் உணர்ந்து அது எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கத் திட்டம் திட்டி நடைமுறைப்படுத்துவதைப் பாராட்டத் தெரிந்த நுட்பமான தன்மை என் நெஞ்சைத் தொட்டது. சின்னஞ்சிறு வயதிலேயே, போற்றத்தக்கதைப் போற்றுவதற்கு உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது நல்லது. ஒருமுறை, தென்காசிப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்வதற்காகத் தென்காசி செல்ல வேண்டியிருந்தது. புகைவண்டி நிலையத்தைவிட்டு, வெளியே வந்து காரில் ஏறிக் கொண்டிருந்தேன். பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவ் வேளை, சில மீட்டர் தொலைவில் இருந்து ஒர் ஏழை மூதாட்டி தம்முடைய பேரக்குழந்தை ஒன்றைத் தரத்ரவென்று இழுத்துக்கொண்டு, கார் அருகே ஒடி வந்தார் என்ன கேட்கப் போகிறாரோ என்று எண்ணினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/623&oldid=788444" இலிருந்து மீள்விக்கப்பட்டது