பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சக்லா நேரில் அழைத்தார் 605 அந்த மூதாட்டி ஏதும் கேட்கவில்லை. கேட்கக்கூடத் தெரியாத இயல்பினள். என்னைப் பார்த்து, "அய்யா நீங்க நல்லாயிருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே கும்பிட்டார். அடுத்த நொடி, பேரக் குழந்தையின் கைகளைப் பிடித்து உயர்த்தி, “ஏழைக்கெல்லாம் சோறுபோட வைக்கிற இந்த அய்யாவுக்குப் பெரிய கும்பிடு போடு” என்று சொன்னார். குழந்தை கீழ்ப்படிந்தது! ஏழை பங்காளர் காமராசர் என்கிற நறுமல்ரோடு சேர்ந்ததால், நாரனைய நானும் மணம் பெற்றேன். 65. டாக்டர் சக்லா நேரில் அழைத்தார் டாக்டர் சக்லாவுடன் பேட்டி 1966ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் அனைந்திந்திய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடந்தது. அதற்கு இந்திய அரசின் கல்வி அமைச்சராகிய டாக்டர் எம். சி. சக்லா வந்து இருந்து தலைமை தாங்கினார். அலுவலர் என்ற முறையில் நான், மாநாட்டில் பார்வை யாளராகக் கலந்து கொண்டேன். மாநாடு மாலையில் கலையும்போது, டாக்டர் சக்லா முன்னிலையில் நமது முதலமைச்சர் என்னைப் பார்த்து, “நாளைக் காலை 9 மணிக்கு நீங்கள் இந்தியக் கல்வி அமைச்சரைப் பேட்டி காணுங்கள்” என்று ஆணையிட்டார். ஏன் என்று கேட்க முடியுமா? அப்படியே ஆகட்டும்’ என்றேன். அடுத்த நாள் காலை உரிய நேரத்தில், கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றடைந்தேன். அங்கிருந்த பணியாளர் விரைந்து உள்ளே சென்று, நான் வந்திருப்பதாக டாக்டர் சக்லா அவர்களிடம் தெரிவித்தார். அடுத்த நொடியே அழைப்பு வந்தது. . நான் உள்ளே துழையும்போது, வயதாலும், பதவியாலும், பட்டறிவாலும் மூத்தவரான டாக்டர் சக்லா எழுந்து நின்று என்னுடன் கைகுலுக்கி என்னை வரவேற்றார். அது என் நெஞ்சை நெகிழ்வித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/624&oldid=788445" இலிருந்து மீள்விக்கப்பட்டது