உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606 நினைவு அலைகள் இந்தியக் கல்விப் பணிக்கு அழைப்பு இருக்கைகளில் அமர்ந்ததும், "சுந்தரவடிவேலு, நீங்கள் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துக்கு வந்துவிடுங்கள். முன்பு சில தடவைகள் மறுத்ததுபோல இப்போது மறுக்காதீர்கள். “காமராசர் உங்களுக்கு எவ்வளவு உரிமை கொடுத்தாரோ, அவ்வளவு உரிமையை நானும் உங்களுக்குக் கொடுப்பேன். "நீங்கள் அலுவலகத்திலேயே முடங்கிக் கிடக்க வேண்டாம். “பல ஊர்களுக்கும் சென்று ஆசிரியர்களோடும், பொதுமக்களோடும் பேசி, சென்னை மாநிலத்தில் நடப்பதுபோன்று மக்கள் உதவியால் பகல் உணவு, சீருடை, பள்ளிச் சீரமைப்பு முதலியவற்றை நடைமுறைப்படுத்த நீங்கள் முயல வேண்டும் என்பதே என் விருப்பம். m “இதுவரை சென்னை மாநிலத்துக்குப் பயன்பட்ட நீங்கள், இப்போது இந்தியா முழுமைக்கும் பயன்பட வாருங்கள்” என்று கேட்டுக் கொண்டார். கரும்பு தின்னக் கூலியாவேண்டும்? 'அய்யா, உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி. எங்கள் முதலமைச்சர் அனுமதி வழங்கினால், நான் தங்கள் அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்” என்று உரைத்தேன். இதற்கிடையில், காப்பியும், பிஸ்கோத்தும் வந்தன. மரியாதைக்காக அவற்றில் சிறு பகுதியைச் சாப்பிட்டுவிட்டு, டாக்டர் சக்லாவிடம் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுக் கொண்டேன். அப்போதும், அவர் எழுந்து நின்று என்னுடன், மீண்டும் கை குலுக்கி வழியனுப்பி வைத்தார். முதல்வர் ஒப்புதல் அளித்தார் நான் இப் பேட்டியைப் பற்றி முதலமைச்சர் மாண்பும்கு பக்தவத்சலத்துக்குச் சிறிதும் காலதாமதமின்றித் தெரிவித்தேன். நான் தில்லிக்குச் செல்வதற்கு அவர் ஒப்புதல் அளித்தார். சில நாள்கள் சென்றன. இந்திய அரசிடமிருந்து நேர்முகக் கடிதம் ஒன்று எனக்கு வந்தது. - இந்தியக் கல்வி அமைச்சகத்தில் இணைக்கல்வி ஆலோசகராக முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு வரும்படியும், பின்னர் ஒய்வு பெறும்வரை பணியை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்தக் கடிதம் கூறிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/625&oldid=788446" இலிருந்து மீள்விக்கப்பட்டது