பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சக்லா நேரில் அழைத்தார் 607 அதில் க்ண்டிருந்த ஒரு தகவல் எனக்குச் சிறிது கலக்கத்தை உண்டு பண்ணியது. அத் தகவல் என்ன? ஏற்கெனவே, சென்னை மாநில முதலமைச்சர், நேர்முகக் கடிதத்தின் வாயிலாக என்னைப் புதுதில்லிக்கு அனுப்ப இசைவு தெரிவித்ததின் தொடர்பாக எனக்கு அக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் இருந்தது. முதலமைச்சர் அதைப்பற்றி என்னைக் கேட்கவில்லை. அக் கடிதத்தைப் பற்றி என்னிடம் சொல்லவும் இல்லை. அப்படியென்றால், நான் சென்னையில் பணிபுரிவதை அவர் விரும்பவில்லை போலும் என்ற அய்யம் ஏற்பட்டது. எனக்கு வந்த கடிதத்தை முதலமைச்சரிடம் காட்டினேன். அவர் பொறுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, “ஏற்றுக் கொள் 'ளுங்கள்” என்றார். அவரின் இசைவைப் பெற்றபிறகு, சென்னை மாநில அரசின் வாயிலாக எனது இசைவைத் தெரிவித்தேன். நான் புதுதில்லியில் இந்திய அமைச்சகத்தில் பதவியேற்க வேண்டுமென்பதில் அப்போது இந்திய அரசின் துணைக்கல்வி அமைச்சராக விளங்கிய திருமதி. டாக்டர் செளந்தரம் இராமச்சந்திரன் அவர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். இருப்பினும், கோப்பு ஆமை வேகத்தில்தான் நகர்ந்தது. இறுதியில், என்னை இந்திய அமைச்சகத்தில், தொடக்கக் கல்விப் பகுதிக்கு இணை ஆலோசகராக நியமிக்கும் ஆணை வந்து சேர்ந்தது. என்னைச் சென்னைப் பதவியிலிருந்து விடுவிக்கும்படி மனு செய்தேன். சில நாள்களில் விடுவிக்கப்பட்டேன். பெரியார்களின் காழ்ப்பு புதுதில்லியில் பணியேற்கும் அரசு அலுவலர்களுக்கு இந்திய அரசின் வீடு ஒதுக்குவதில் சற்றுக் காலதாமதம் ஏற்படும். இடைக்கால ஏற்பாடாக, தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதற்கு அனுமதிக்கலாம். அப்படி அனுமதித்தால் மூன்று மட்டக் கட்டணங்களில் ஏதாவது ஒன்றை வசூலிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/626&oldid=788447" இலிருந்து மீள்விக்கப்பட்டது