பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EՈՅ நினைவு அலைகள் பொதுமக்கள் தங்க நேர்ந்தால், மிக அதிகப்படியான கட்டணம். == மாநில அரசு அலுவலர், இந்திய அரசுப் பணியின் பொருட்டுத் தங்க நேரிட்டால், நடுத்தரக் கட்டணம் மாநில அரசுப் பணியின் பொருட்டு மாநில அலுவலர் தங்க நேரிடும்போது மிகக் குறைந்த கட்டணமே செலுத்த வேண்டும். நான் இடைப் பகுதியைச்சேர்ந்தவன். எனவே, என்னிடம் நடு விழுக்காட்டில் கட்டணம் வாங்கும்படி கேட்டிருந்தேன். ஆனால், அதிகபட்சக் கட்டணம் செலுத்தவேண்டுமென்று ஆணை வந்தது. பெரிய இடத்துக் காழ்ப்பு எப்படி எல்லாம் விளையாடும் என்பதை நன்கு புரிந்து கொண்டேன். அடுத்த திங்கள், வேறொரு சென்னை மாநில அரசு அலுவலர் இந்திய அரசுப் பணிக்கு மாறுதலாகி வந்து சேர்ந்தார். அவருக்கு இரண்டாம் விழுக்காட்டில் கட்டணம் வசூலித் தார்கள். ரூபாய்க்கு நூறு காசு பெறுவதற்கும், பெரியவர்களுக்கும் வேண்டியவனாய் இருக்க வேண்டும் போலும். பேராதரவு பொதுமக்களோடு நேரடித் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதைத் தவிர, புதுதில்லி வாழ்க்கை நிறைவாகவே இருந்தது. இரண்டொரு திங்களில் புதுதில்லி இராமகிருஷ்ணாபுரத்தில் பல மாடிக் கட்டடமொன்றின் தரை மட்டத்தில் வீடு கிடைத்தது. வசதியாகவுமிருந்தது. - அப்போது, புதுதில்லியில் 'ஆடிட்டர் ஜெனரல்’ அலுவலகத்தில் பணிப் பயிற்சி பெற்று வந்த திரு. சிவகுமாரும் அவருடைய மனைவி சியாமளாவும் எங்கள் அழைப்பின் பேரில், எங்கள் இல்லத்திற்கு வந்து எங்களோடு தங்கி இருந்தார்கள். - அவர்கள் அப்படியிருந்தது எங்களுக்குப் பேராதரவாக --- இருந்தது. திரு. சிவகுமார், சென்னை பொதுக்கல்வித் துறையில் பகலுணவுத் திட்டத்துக்குத் தனி அலுவலராக இருந்த திரு. வடிவேலுப் பிள்ளை அவர்களின் இளையமகன் ஆவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/627&oldid=788448" இலிருந்து மீள்விக்கப்பட்டது