பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சக்லா நேரில் அழைத்தார் 609 சேலம் நகராட்சிக் கல்லூரியின் முதல்வராகவும், எனது மூத்த நண்பராகவும், விளங்கிய திரு. இராமசாமிக் கவுண்டர் அவர்களின் மருமகன். திரு. து. சீனிவாசன் என்பவர் அப்போது புதுதில்லியில் 'கைவினைப் பொருள்கள் பிரிவில் அலுவலராக இருந்தார். அவரும் அவரது மனைவி கண்ணம்மாளும் கரோல்பாக்கில் குடியிருந்தார்கள். நாங்கள் அடிக்கடி ஒருவரையொருவர் சந்தித்து நீண்டநேரம் உரையாடுவோம். டாக்டர் சகானியின் உதவி புதுதில்லியில் வாழ்ந்தபோது, என் மனைவி காந்தம்மா அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். கரோல்பார்க்கில் திரு. சீனிவாசன் வீட்டாருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் சகானி, காந்தம்மாவுக்கும் மருத்துவம் பார்த்தார்.

  • ■ ங் m * H ■ s -- அவர் முறைப்படி ஒமியோபதி மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்து அதில் பட்டம் பெற்றவர்.

தொழிலில் திறமை பெற்றவர், பழகுவதற்கு இனியவர், நல்ல பண்பாளரும்கூட கல்வித் தொண்டாற்றும் ஒருவரிடம் கட்டணம் வாங்க மாட்டேன் என்று பிடிவாதமாக இலவச மருத்துவமே செய்து வந்தார். ஆனால், மருந்துகளின் விலையைமட்டும் கட்டாயப்படுத்திக் கொடுத்துவிடுவோம். டாக்டர் சகானிக்குக் காந்தம்மாவும் நானும் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். r நான் புதுதில்லியில் பதவியேற்றபோது, கல்வி அமைச்சகம் பழைய செயலகத்தின் வடக்குப் பகுதியில் செயல்பட்டு வந்தது. புதிய கட்டடத்திற்கு மாற்றம் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை பெரியதாகவும், காற்றோட்டமாகவும், வசதியாகவும் இருந்தது. உதவியாளர்கள் எல்லாம் குறிப்பு அறிந்து சரியாக ஒத்துழைத் தார்கள். சகாக்களும் தோழமை உணர்ச்சி காட்டினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/628&oldid=788449" இலிருந்து மீள்விக்கப்பட்டது