பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610 நினைவு அலைகள் சில திங்களில், கல்வி அமைச்சகத்துக்கு என்று தனியாகக் கட்டப்பட்ட 'சாஸ்திரி பவன்' என்ற புதிய கட்டடத்திற்கு எங்கள் அலுவலகத்தை மாற்ற வேண்டியிருந்தது. அந்தச் சமயம், நான் நிர்வாகத்துக்கு இணை ஆலோசகராக இயங்கி வந்தேன். எனவே, அமைச்சகம் முழுவதையும் புதிய இடத்துக்கு மாற்றும் பொறுப்பு என் மேல் விழுந்தது. இருப்பினும் எவரும் எந்தவிதக் குறையும் சொல்லாத அளவிற்கு ஒழுங்காக எதுவும் கெடாமல் அமைச்சகம் முழுவதும் சாஸ்திரி பவனில் குடியேறியது! விறுவிறுப்பற்ற சூழல் இதற்கிடையில், நிகழ்ந்த சிலவற்றைப் பற்றி இங்கே குறிப்பிட .ேvண்டும். நான் புதிய அலுவலில் சேர்ந்த சில திங்களில், அமைச்ச்ர் அவையில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் சக்லா வெளியுறவுத் துறையின் அமைச்சராக மாற்றப்பட்டார். மாண்புமிகு பக்ருதின் அலி அகமத் கல்வி அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் கல்விப் பொறுப்பை ஏற்ற இரண்டொரு நாள்களில், நெஞ்சுவலி நோய்க்கு ஆளானார். தொடர்ந்து சில திங்கள் மருத்துவம் செய்துகொண்டார். பின்னரும் பல வாரங்கள் ஒய்வு எடுப்பது இன்றியமையாதது 1967இல் பொதுத் தேர்தல் நடந்தது. அதன் விளைவாக டாக்டர் திரிகுணசென் கல்வி அமைச்சரானார். பேராசிரியர் ஷெர்சிங்கும், திரு. பகவத்ஜா ஆசாத் ஆகிய இருவரும் துணை அமைச்சர்களாகப் பதவி ஏற்றார்கள் ஒராண்டுக்குள், இத்தனை மாற்றங்கள் ஏற்பட்டதால், என்னைப் புதுதில்லிக்கு அழைத்ததன் நோக்கம் விறுவிறுப்பாகச் செயல்படவில்லை. சிக்கனம் என்ற வான்டைக் காற்று வேறு வீசிற்று. எனவே, அலுவலக வேலையே என் நேரத்தில் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/629&oldid=788450" இலிருந்து மீள்விக்கப்பட்டது