உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சக்லா நேரில் அழைத்தார் 511 யூனிசெப் திட்டம் இருப்பினும், அமைச்சர் டாக்டர் திரிகுனசென் என்னுடைய நிர்வாகத் திறனிலும், குழுச் சார்பின்மையிலும் நம்பிக்கை வைத்து என்னை நியமனங்களுக்கு இணை ஆலோசகராக மாற்றியது, என் மதிப்பை உயர்த்தியது. * = நான் இந்தியக் கல்வி அமைச்சகத்தில் பதவியேற்றபோது, ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளின் அறிவியல் பயிற்சித் தரத்தை உயர்த்தும் பொருட்டு யூனிசெப் ஒரு திட்டம் கொடுத்திருந்தது. அது நெடுநாள்களாக ஆலோசனையிலேயே இருந்து வந்தது. அத் திட்டத்தின்படி, ஒவ்வோர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியிலும் அறிவியல் கற்பிப்பதற்காகப் போதுமான ஆய்வுக்கூட துணைக் கருவிகளை 'யூனிசெப்’ இலவசமாகவே அளிக்கும். அதோடு மட்டுமன்றி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு "நடமாடும் அறிவியல் ஆய்வகம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதில் போதிய துணைக்கருவிகள் சேகரித்து வைக்கப் பட்டிருக்கும். அந்த ஆய்வகம் திட்டமிட்டபடி முறையாகப் பல நடுநிலைப் பள்ளிகளுக்கும், உயர்நிலைப் பள்ளிகளுக்கும் சென்று அறிவியல் ஆய்வுகளைச் செய்து காட்டி விளக்கும். நான் பதவியேற்றதும் இத் திட்டத்தில் அக்கறை காட்டினேன். கல்வி அமைச்சகம், நிதி அமைச்சகம், திட்டக்குழு ஆகிய மூன்று அமைப்புகளின் உயர் அலுவலர்களைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தேன். யூனிசெப் வல்லுநரின் ஒத்துழைப்போடு அத் திட்டத்தின் பல்வேறு கூறுகளை அலசிப் பார்த்து முடிவெடுத்தோம். அத் திட்டம் ஒப்புதல் பெறும் நிலைக்கு உருவானது. உரிய செயலர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பும்படி செய்தேன். -- அதன்படி அது செயல்படுத்தப்பட்டது. அப்போதைய இந்தியக் கல்வி அமைச்சகத்தின் செயலராக விளங்கிய திரு. பிரேம்கிருபால் என்ற பஞ்சாபியர் என்பால் பெருமதிப்பு வைத்திருந்தார். பெரும் பொறுப்புகளையும் என்னிடம் கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/630&oldid=788452" இலிருந்து மீள்விக்கப்பட்டது