பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614 நினைவு அலைகள் தமிழக முதல்வர் மாண்புமிகு சி. என். அண்ணாத்துரை புதுதில்லிக்கு வருகை புரிந்தார். --- - அதைப் பற்றிய அறிவிப்பு முன்னதாகவே வெளியானது. j934 ஆம் ஆண்டு முதல், அறிஞர் அண்ணாவிடம் எனக்குப் பற்றும், பாசமும் உண்டு. அவரும் என்பால் அன்பும், நம்பிக்கையும் கொண்டிருந்தார். எனவே, முதலமைச்சர் வரும்போது அவரைப் புதுதில்லியில் காண முடியவில்லையே என்ற ஏக்கம் மேலிட்டது. அதே நேரத்தில் வெளிநாட்டுப் பயணத்தையும் ஒத்திப் போட முடியவில்லை. எனவே, என்னை மன்னிக்கும்படி அறிஞர் அண்ணாவுக்கு நேர்முகக் கடிதம் எழுதிவிட்டுச் சோவியத் நாட்டுக்குச் சென்றேன். அடுத்தமுறை, முதலமைச்சர் அண்ணா புதுதில்லிக்கு வந்தபோது அவரைக் காணச் சென்றேன். o திராவிட முன்னேற்றக் கழகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அய்ந்தாறு பேர்கள் அண்ணாவுக்காகக் காத்திருந்தார்கள். - நான் ஒருவன்தான் அலுவலர். நான் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் முதலமைச்சர், நாங்கள் அமர்ந்திருந்த அறைக்குள் வந்து அமர்ந்தார். . . * - * ஒரு மூலையில் ஒதுங்கியிருந்த என்னைப் பார்த்துக் குறித்துக் காட்டி அழைத்துத் தம் பக்கத்தில் உட்கார வைத்துவிட்டார். நான் எங்குக் குடியிருக்கிறேன் என்பதைச் சென்ற முறையே கேட்டு வைத்து இருப்பதாகக் கூறினார். - அண்ணாவின் மதிப்பீடு - என்னுடைய சோவியத் பயணம், அங்குப் பரவலாக நடக்கும் அஞ்சல் வழிக் கல்வி, பயிற்றுமொழி முதலியன பற்றி என்னோடு நாற்பத்தைந்து மணித்துளிகள் கலந்துரையாடினார். அப்போது அவர் வெளியிட்ட ஒரு கருத்து இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. --- “சோவியத் நாட்டின் தேவைகள் ஒருவகையின! நம்முடைய தேவைகள் வேறு வகையானவை. o o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/633&oldid=788455" இலிருந்து மீள்விக்கப்பட்டது