பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவைத் தில்லியில் கண்டேன் 615 "ஆண்டுக்கு ஆண்டு புதிது புதிதாக இலட்சக்கணக்கானவர் களின் பொதுக்கல்வி, தொழில்கல்வித் திறத்தை உயர்த்துவது சோவியத் நாட்டின் உடனடித் தேவை. “நம்முடைய தேவையோ வேறு. “ஆண்டுக்கு ஆண்டு கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத் தேடித் தருவது நமது உடனடி நெருக்கடி "நாம் இந் நெருக்கடியைப் போக்குவதற்கு முன்உரிமை தர வேண்டும்” என்பது முதலமைச்சர் அண்ணாவின் மதிப்பீடு. o காமராஜருக்கும் அதே கருத்து முதலமைச்சர் அண்ணாவிடம் இதைப் பற்றிப் பேசுவதற்கு முன், பெருந்தலைவர் காமராஜரிடம் இதுபற்றி நான் பேச நேரிட்டது. * அவர் மதிப்பீடும் அப்படியே இருந்தது. “இளைஞர்களுக்கு வேலை என்பதற்கு முதல் உரிமை கொடுத்து, அதில் நாட்டத்தையும் முயற்சியையும் பணத்தையும் செலவு செய்தால், பொ துமக்கள் வாழ்வு மலரும்; அவர்களிடையே நம்பிக்கை பிறக்கும்” என்று காமராஜர் மொழிந்தது இன்றும் என் நினைவில் நிற்கிறது. ■ * . வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்த்தாலும், காமராசரும் அண்ணாவும் தங்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஒட்டுமொத்த சமுதாய நலனைப் பற்றியே சிந்தித்ததால் இருவரும் ஒரேவகையான சமூக இயல் மருத்துவம், கண்டார்கள். ஒருமைப்பாட்டில் உறுதி மற்றொரு துறையிலும் அண்ணாவின் பார்வையில் இந்திய ஒருமைப்பாட்டைக் காண முடிந்தது. - முதலமைச்சர் அண்ணாவை அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக் கழகம் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவதற்கு அழைத்ததை நினைவுபடுத்திக் கொள்வோம். - அச் செய்தியோடு மற்றொரு செய்தியும் வெளியானது. ‘முதலமைச்சர் அண்ணா அமெரிக்கா செல்லும் முன், புதுதில்லிக்கு வருவார். பிரதமர் திருமதி இந்திராகாந்தியைக் காண்பார். இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/634&oldid=788456" இலிருந்து மீள்விக்கப்பட்டது