பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ETE நினைவு அலைகள் அணுகுமுறையைக் கேட்டு அறிந்து கொண்டு போவார்’ என்பது செய்தியின் ஒரு பகுதி. இச் செய்தி வடஇந்திய அலுவலர்கள், வட்டாரத்தில் பெருமகிழ்ச்சியை ஊட்டியது. . இதைப் பற்றியே பலரும் பேசினர். நடந்தது என்ன? அலுவல் நெருக்கடி காரணமாக, முதலமைச்சர் அண்ண்ா, பிரதமர் இந்திராகாந்தியை நேரில் கண்டு கலந்துரையாடாமலேயே நேரே அமெரிக்கா செல்ல நேர்ந்தது. அதன்பின்னர் இரண்டொரு நாள்கள் அண்ணா நம் நாட்டின் வெளிஉறவுக் கொள்கை பற்றி என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்த வண்ணம் இருந்தோம். அமெரிக்காவில் செய்தியாளர்கள் முதலமைச்சர், அண்ணாவிடம் அது பற்றிக் கேள்வி கேட்டார்கள். அண்ணாவும் திட்டவட்டமாகப் பதில் கூறினார். == “பல்லாண்டு காலம் காங்கிரஸ் இயக்கத்திலேயே தொண்டாற்றி முதிர்ந்த தலைவர்கடிட, இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையை இவ்வளவு தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வெளியிட்டு இருக்க முடியாது. * 'அவ்வளவு திட்டவட்டமாக அண்ணா பதில் கூறியுள்ளார்” என்று பூரிப்போடு பலரும் பாராட்டக் கேட்டேன். அப் பாராட்டுகள் இன்றும் இனித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் எல்லாக் கூறுகளிலும் நாம் நினைக்கிறது போலவே, மற்றவர்களும் நினைத்தால்தான் அவர்கள் நமது நண்பர்க்ள் இல்லையேல் பகைவர்கள் என்று கருதுவது சரியல்ல. ஒரே பெரிய விவகாரத்தை, வெவ்வேறு கோணங்களிலிருந்து காண்போர், வெவ்வேறு தோற்றங்களாகக் காண்பர். . அந்த மாறுபட்ட கருத்துகளைக் கூறுவோரை எல்லாம் மாற்றாராகக் கருதி வெறுப்பதும் பகைப்பதும் - கருத்து வேறுபாடு கொண்டவர்களை, மாற்றாராகவே தள்ளிவிடும் போக்கை வளர்ப்பதும் தவறு என்பதை மேற்படி நிகழ்ச்சி தெற்றென விளக்கிற்று. - இந்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு நாளன்று நாட்டுக்கும், சமுதாயத்துக்கும், இலக்கியத்துக்கும், கலைக்கும் அரும்பணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/635&oldid=788457" இலிருந்து மீள்விக்கப்பட்டது