பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவைத் தில்லியில் கண்டேன் 617 ஆற்றியவர்களைப் பாராட்டும் வகையில் ‘பத்மபூரீ முதல், 'பாரத ரத்னா’ வரையில் விருது அளிப்பதை அனைவரும் அறிவர். விருது 1967 ஆம் ஆண்டு நான் புதுதில்லியில் இந்தியக் கல்வி அமைச்சகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது பற்றிய ரகசியச் சுற்றறிக்கை ஒன்று வந்தது. இணை ஆலோசகர் நிலைக்குக் குறையாது பதவி வகிப்போர் மேற்படி விருதுகளுக்குப் பரிந்துரைக்கலாம் என்று அச் சுற்றறிக்கை கூறிற்று. அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள என் உள்ளம் துடித்தது. அறிவு சிந்தனை செய்தது. தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிய ஒருவருக்குப் பரிந்துரைக்க மனம் விழைந்தது. * தமிழ்த் தொண்டர்களுக்குப் பஞ்சம் இல்லை. அவர்களில் யாருக்கு முன் உரிமை தருவது என்று சில வினாடிகள் சிந்தித்தேன். இமாலயச் சாதனை ஒன்று என் மனக் கண்முன் மின்னிற்று. அது எது? பெரியசாமித் துரன் அதுவே தமிழ்க் கலைக் களஞ்சியம். இந்திய மொழிகளிலேயே தமிழ் மொழியில்தான் முதன்முதலாகப் பெரிய கலைக் களஞ்சியம் ஒன்று, பத்துத் தொகுப்புகளாக வெளிவந்தது. - கலைக் களஞ்சியத்தைத் தொகுப்பது எளிதல்ல. அது கடலைக் கடைவது போன்றது. அதற்கு எண்ணற்றவர்களின் ஒத்துழைப்பு தேவை. பல்வேறு துறை வல்லுநர்களை அணுகி, அவர்களுடைய குறிப்புகளையோ கட்டுரைகளையோ, திரட்டித் தக்காரைக் கொண்டு செப்பம் செய்து களஞ்சியத்தில் சேர்க்க வேண்டும். எண்ணற்றவரின் ஒத்துழைப்பைப் பெறுவது மிகக் கடினமானது. அதற்கு இனிய பண்பு இருந்தால் மட்டும் போதாது. எல்லையற்ற பொறுமை வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/636&oldid=788458" இலிருந்து மீள்விக்கப்பட்டது