உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவைத் தில்லியில் கண்டேன் 619 "உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல். ஒருவரைச் சிறப்பிப்பது என்றால் அவர் தகுதிக்குத் தகுந்த சிறப்புச் செய்ய வேண்டும். பெரியசாமித் துரன் தகுதிக்குப் பத்மபூஷனே ஏற்றது” என்று பதில் கூறினேன். பரிந்துரை போயிற்று சில நாள்கள் ஓடின, மேற்படி பரிந்துரை பற்றிய கோப்பு, முத்திரையிட்ட உறையில் எனக்கே திரும்பி வந்தது. உறையை உடைத்துப் பார்த்தேன். துணை அமைச்சர்களில் ஒருவர், “இது பற்றி நேரில் பேசவும்” என்று கோப்பில் ஆணையிட்டிருந்தார். அவ்வாறே நேரில் பேசினேன். தமிழக அரசு பரிந்துரைக்கவில்லை துணை அமைச்சருக்கு ஒர் ஐயப்பாடு; அதை என்னிடம் ஒளிக்காமல் சொன்னார். அது என்ன? “பெரியசாமித் துரனின் சாதனை பெரியது. கலைக் களஞ்சியத்தை உருவாக்கி வெளியிடுவது செயற்கரிய பணியே. அதற்கே விருது கொடுக்கலாம். “மேலும், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியராகவும் விளங்குகிறார். அத்தகைய ஒருவருக்கு விருது அளிப்பது பொருத்தமாகவே தோன்றுகிறது. “இருப்பினும், சென்னை மாநில அரசு இதுவரை இதைப் பாராட்டிப் பரிந்துரை அனுப்பாததால் துாரன் தேசிய நீரோட்டத்திற்கு மாறானவரோ என்ற கேள்வி என்னுள் எழுந்தது. "அதைக் கோப்பில் எழுத வேண்டாம் என்று நேரில் பேசித் தெரிந்து கொள்கிறேன்” என்று துணை அமைச்சர் வெளிப்படையாகக் கேட்டார். நானும் உள்ளம் திறந்து பேசினேன். “திரு. துாரனை நான் 1928 முதல் நன்கு அறிவேன். "அவர் என் நண்பர் என்பதை ஒளிக்காமல் தெரிவிக்கிறேன். "அவர் நல்ல நாட்டுப் பற்றாளர். காந்தியவாதி. ஆக்கப் பணிகளில் மட்டுமே ஈடுபாடு உடையவர். “அவர் தேசிய நீரோட்டத்தில் சேராதவர் என்றால் பெரும்பாலோரை அதே முத்திரையில் ஒதுக்கிவிட நேரிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/638&oldid=788460" இலிருந்து மீள்விக்கப்பட்டது