உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 நினைவு அலைகள் "அவர் வந்துள்ள மகிழ்ச்சியான நிகழ்ச்சியை நீ கான வேண்டும். “கல்வித்துறையின் உச்சமட்டத்திற்கு வளர்ந்துள்ள நெ. து. சுந்தரவடிவேலு, கீழ்ப்படியில் இருந்து பணியைத் தொடங்கியவர். "அவருக்கு வாழ்த்து சொல்லுகிறேன்” என்று வாழ்த்தினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் மறைந்தபோதும் நான் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்தேன். அவ்வலுவல் பற்றி காமன்வெல்த் பல்கலைக் கழகச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆனேன். செயற்குழு கோலாலம்பூரில் கூடியது. நான் அக் கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, இப் பெரிyவர் சென்னையில் இயற்கை எய்தினார். o குழுக்கூட்டம் முடிய சில நாள்கள் ஆயின. எனவே, நேரில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இயலாமல் போயிற்று. சில நாள்களுக்குப்பின் சென்னைக்குத் திரும்பியதும், அவர் இல்லத்துக்குச் சென்று அவரது மகன் டாக்டர் கோபாலிடம் துக்கம் விசாரிக்க மட்டுமே முடிந்தது. கோலாலம்பூரில் உலகத் தமிழ்நாடு கோலாலம்பூர் என்றதும் அந்தப் பெருநகருக்கு நான் முதன் முறையாகச் சென்றது நினைவுக்கு வருகிறது. அது எப்போது? அது 1966இல் எதற்காக? முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து, எவர் எவர் அம் மாநாட்டுக்குச் செல்வது என்று நீண்ட பட்டியல் வெளியானது. முதலமைச்சர் பக்தவத்சலம் தலைமையில் சென்றது சாலப் பொருத்தம். அப் பட்டியலில், டாக்டர் சிலம்புச்செல்வர், டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன். பன்மொழிப்புலவர், தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு. வரதராசனார் போன்ற தமிழறிஞர்கள் இடம் பெற்றதும் பொருத்தமே. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/643&oldid=788466" இலிருந்து மீள்விக்கப்பட்டது