உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவைத் தில்லியில் கண்டேன் 625 என் பெயரில்லை முதல் பட்டியலைப் பார்த்த மலேசியத் தமிழர்கள் சிலர் ஏமாற்றமடைந்தார்கள். இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு முதன் முதலாக எழுத்தறிவூட்டும் தீக்குச்சியாகப் பயன்பட்ட என் பெயர் அப் பட்டியலில் இடம்பெறாதது பற்றி வருந்தினார்கள். முதல் தமிழ் மாநாட்டை முன்நின்று நடத்திய அமைப் பாளர்கள் இது பற்றிப் பேசினார்கள். சென்னை மாநில அரசின் பட்டியலில் இடம் பெறா விட்டாலும், மாநாட்டுக் குழுவின் சார்பில் என்னை அம் மாநாட்டுக்கு அழைப்பது என்று முடிவு செய்தார்கள். தனிநாயக அடிகளார் மாநாட்டுக் குழுவின் சார்பில், தவத்திரு தனிநாயகம் அடிகளார் சென்னையிலுள்ள திரு. ஆ. சுப்பையாப் பிள்ளை அவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “மாநாட்டை ஏற்பாடு செய்யும் குழு நெ. து. சு. வின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ளும். "நீங்கள் தலையிட்டு இந்த ஏற்பாட்டிற்கு மாநில அரசு இசையும்படி செய்யுங்கள். "அந்த அடிப்படையில் மாநாட்டிற்கு நெ. து. சு. வை ஒப்புக் கொள்ள வைப்பது, உங்கள் பொறுப்பு” என்று அடிகளார் சுப்பையாப் பிள்ளையிடம் கேட்டுக் கொண்டார். அடிகளார். அதோடு நிற்கவில்லை. கோலாலம்பூரில் இருந்து என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மேற்படி ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டு, எப்படியாவது முதல் உலகத் தமிழ் மாநாட்டிற்கு வருகை புரியும்படி கேட்டுக் கொண்டார். தனிநாயகம் அடிகளாரின் முயற்சி வெற்றி பெற்றது. என்னைக் கோலாலம்பூர் மாநாட்டுக்குப் போகும்படி மாநில அரசு ஒப்புதல் அளித்தது. நாவலர் நெடுஞ்செழியன், மாநில அரசியலில் எதிர்க் கட்சிக்காரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/644&oldid=788467" இலிருந்து மீள்விக்கப்பட்டது