உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 நினைவு அலைகள் ஆனால் மாநாட்டுக்கு வந்த பலர், ஆளுங்கட்சியினர் அல்லது ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள்போல் காட்டிக் கொண்டார்கள். எனவே, பலர் நாவலரோடு பட்டும் படாததுமாகப் பழகினர். நாவலரோடு தங்கினேன் என் நிலை வேறு இயக்குநராயிருந்த காலத்தில், கட்சிக் கண்ணோட்டத்தோடு எவரிடமும் பழகாதவன். அதோடு தற்செயலாக நாவலருக்கு இடம் ஒதுக்கியிருந்த அதே ஒட்டலில், எனக்கும் அறை ஒ துக்கியி ருந்தார்கள். எனவே, நாங்கள் இருவரும் ஒன்றாகப் போகவும், வரவும் நேரிட்டது. சிலபோது கடைத்தெருப் பக்கம் இருவருமாக நடந்து சென்று நகர் நோட்டம் பார்த்தோம். பல கடைகள் தமிழர்களால் நடத்தப்பட்டவை. அக் கடைகளிலிருந்தவர்கள் நாவலரைத் தொலைவிலிருந்தே அடையாளங்கண்டு கொண்டார்கள். பரிவோடும், பாசத்தோடும் வெளியே வந்து வணங்கி விருந்தோம்பிச் சிறப்பித்தார்கள். ஒவ்வொரு முறையும் நாவலர் என்னை ‘சென்னை மாநில உயர்கல்வி இயக்குநர் என்று அறிமுகப்படுத்தினார். அநேகமாக மலேசியத் தமிழர்கள், "அய்யாதானே பொதுக்கல்வி இயக்குநராக இருந்தது? “தொடக்கப் பள்ளிக்கூடம் இல்லாத எங்கள் ஊருக்கு உங்கள் காலத்தில்தான் பள்ளி வந்தது. "உங்களால்தான் எங்கள் ஊர், உயர்நிலைப் பள்ளிக்கூடம் பெற்றது. “எங்கள் வட்டாரத்தில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடந்தபோது நாங்கள் நன்கொடை அனுப்பியுள்ளோம்” எனத் தமிழ்நாட்டு நிகழ்ச்சி ஒன்றோடு தொடர்பு படுத்திப் பூரித்தார்கள். அது எனக்கும் பூரிப்பு ஊட்டியது. முதல் உலகத் தமிழ் மாநாட்டின்போது, நானும் மற்றும் சிலரும் முதலமைச்சரோடு பினாங்கு சென்று வர, ஏற்பாடு செய்திருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/645&oldid=788468" இலிருந்து மீள்விக்கப்பட்டது