உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 67. நிலை குலையாத காமராசர் காமராசர் இல்லத்தில் சாமியார்கள் ஒரு மாலைப்பொழுது புதுதில்லி அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினேன். வீட்டிற்குள் நுழையும்போதே, தொலைபேசி அலறியது. அதனோடு தொடர்பு கொண்டேன். “நெ. து. சு.வா. பேசுகிறது? |ಿನ್ತಿ? ஒரு செய்தியை? பெருந்தலைவர் ;e,M.; இல்லத்தை நிர்வான சாமியார்கள் முற்றுகையிட்டு இருக்கிறார்களாமே! அது உண்மையா?” என்று தமிழ்நாட்டு நண்பர் ஒருவர் என்னைக் கேட்டார். “உங்களிடம் இருந்துதான் முதன்முதலாகக் கேள்விப் படுகிறேன். உங்களுக்கு மேற்கொண்டு தகவல் கிடைத்தால் எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்” என்று பதில் கூறிவிட்டுப் பேச்சை முடித்துக்கொண்டேன். தமிழ்நாடு அரசின் விருந்தினர் விடுதியாகிய தமிழ்நாடு இல்லத்தோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் என்ன என்று தோன்றியது. அதை என் மனைவி காந்தம்மாவிடம் சொன்னேன். தொலை பேசியில் கேட்பது பொருத்தமாய் இராது, நேரில் தமிழ்நாடு இல்லம் சென்று விசாரித்து வாருங்கள் என்று என் மனைவி மாற்றுத் திட்டம் கூறினார். இருவருமே தமிழ்நாடு இல்லம் சென்றோம். தமிழ்நாடு இல்லத்தில் காமராசரைச் சந்தித்தோம் அங்கே சில நண்பர்கள் குழுமியிருந்தனர். இல்லத்தின் வரவேற்பாளரை அந் நிகழ்ச்சி பற்றிக் காதும் காதும் வைத்தாற்போல் கேட்டேன். அவர் அந்த நிகழ்ச்சியை உறுதிப்படுத்தினார். “வந்தது, வந்தீர்கள் மூன்று நான்கு மணித்துளிகள் பொறுத்து இருங்கள் இங்குத் தங்குவதற்காகப் பெருந்தலைவரே வந்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்து விசாரிக்கலாம்” என்று ஆலோசனை கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/647&oldid=788470" இலிருந்து மீள்விக்கப்பட்டது