பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலை குலையாத காமராசர் 629 கலக்கமில்லை பெருந்தலைவர் காமராசர் இரு மணித்துளிகளில் அங்கு வந்து சேர்ந்தார். வழக்கமான புன்னகை முகத்தில் தவழ்ந்தது; கவலையின் கீற்று ஒன்றும் தென்படவில்லை. Lř* ஒ எப்போதும்போல், கணிர் என்ற குரலில், “என்ன, இங்கே வந்து இருக்கிறீர்கள்?’ என்று என்னைக் கேட்டார். வேறு சிலரைப் பார்த்து “நீங்கள் எப்போது தில்லிக்கு வந்தீர்கள்?” என்று கேட்டுக் கொண்டே கட்டிடத்திற்குள் வந்தார். “என் மனைவியைப் பார்த்துவிட்டு, என்ன நீங்கள் கூட வந்து இருக்கிறீர்கள்?’ என்று வியப்போடு கேட்டுக் கொண்டே வரவேற்பு அறையை நோக்கி நடந்தார். நாங்கள் பின் தொடர்ந்தோம். வரவேற்பு அறையில் அமைதியாக அமர்ந்த காமராசர் எங்களையும் அமரச்சொன்னார். அத்தனை பேரும் அமர்ந்ததும் ஒருவர் பேச்சைத் தொடங்கினார். “என்ன, உங்கள் வீட்டைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு நிர்வானச் சாமியார்கள் கலாட்டா செய்ததாகக் கேள்விப்படுகிறோமே! அது உண்மையானதா?” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஆம்பூர் பி. எஸ். இராசகோபால் நாயுடு வினவினார். "ஆமாங்கறேன். இன்று மத்தியானம் என் வீட்டைச் சுற்றிக் கலாட்டா செய்தார்களாம். எனக்கு ஒன்றும் தெரியாது. நான் வழக்கம்போல் பகலுணவு உண்டதும் போய் உறங்கிவிட்டேன். “எவ்வளவு நேரம் துங்கி இருப்பேன் என்று தெரியாது. து.ாங்கிக் கொண்டிருந்த என்னை, அம்பி வந்து எழுப்பி ஒன்றும் சொல்லாமல், நேரே பின்பக்க நுழைவாயில் வழியாக அழைத்துச் சென்று, காரில் ஏற்றி இங்குக் கொண்டு வந்து இருக்கிறான். “வருகிற வழியில், சாமியார்கள் என் வீட்டை முற்றுகை இட்டார்கள். தீ மூட்ட முயன்றார்கள் என்று கேள்விப்பட்டேன். அவ்வளவே எனக்குத் தெரியும். “வெறிப் பயல்கள்: சுற்றி இருந்தால் என்ன செய்து இருப்பார்களோ சொல்ல முடியாது!” என்று கலகலப்பாகவே காமராசர் பதில் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/648&oldid=788471" இலிருந்து மீள்விக்கப்பட்டது