பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E32 நினைவு அலைகள் திட்டத்தின் நோக்கம் என்ன? - பயிர்த் தொழிலில் ஈடுபட்டு உள்ள குடியானவர்களுடைய தொழில் தரத்தை உயர்த்துவது. அதற்குக் கருவியாக எழுத்தறிவு முயற்சியைப் பயன்படுத்திக் கொள்வது. அக் காலக் கட்டத்தில், இந்தியா முழுவதிலும் 100 மாவட்டங் களை அமோக விளைச்சல் மாவட்டங்களாகத் தேர்ந்து எடுத்து இருந்தார்கள். அம் மாவட்டங்களில் வீரிய விதைகளையே விதைப்பது, போதுமான உரங்களைப் போடுவது, பூச்சிகொல்லி மருந்துகளை உரிய காலத்தில் தெளிப்பது, பயிர் மேம்பாட்டு முறைகளைக் கடைப்பிடித்து விளைச்சலைப் பன்மடங்கு பெருக்குவது. இவை திட்டத்தின் கூறுகளாகும். இவற்றிற்காக இந்திய அரசு தாராளமாக நிதி உதவி செய்தது. அத்தகைய மாவட்டங்களில், உழவர்களுக்கு எழுத்து அறிவையும் கற்றுக் கொடுத்து விட்டால், அதிகப்பயன் ஏற்படுமென்று கருதப்பட்டது. இச் சிந்தனையில் தவறில்லை. இத் திட்டத்தைக் கல்வி அமைச்சகம், தொடர்பு தகவல் துறை அமைச்சகம், வேளாண்மைத் துறை அமைச்சகம் ஆகிய மூன்றும் இணைந்து செயல்படுத்த வேண்டும். இதற்கான முதியோர் கல்வி வல்லுநர்களை யுனெஸ்கோ உதவியைக் கொண்டு பெறுவது. இவை திட்டங்களின் அடிப்படைகள். பேச்சு வளர்ந்தது. காலம் ஒடிற்று. உழவர்கள் எழுத்தறிவுத் திட்டம் ஒப்புதல் பெறாமல் துரங்கிக் கிடந்தது. கல்வி அமைச்சகத்தில் இத் துறை என் பொறுப்பில் வந்தபோது, நான் தனி அக்கறையும், ஆர்வமும் காட்டினேன். - அலுவலரின் அய்யம் முறைப்படி திட்டக் குழுவோடும், இணைந்த அமைச்சகங் களுடனும் கலந்து பேசினேன். இத் திட்டம், இறுதியாக நிதி அமைச்சகத்தின் 'செலவினக்குழு"வின் ஒப்புதலுக்குச் சென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/651&oldid=788475" இலிருந்து மீள்விக்கப்பட்டது