உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணா மாநிலப் பணிக்கு அழைத்தார் 633 நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலர் தலைமை தாங்கினார். இத்திட்டத்தின் துணுக்கங்களைக் கூர்ந்து ஆய்ந்தனர். ஆய்வின்போது, கூட்டத் தலைவர், “கல்வித்துறை, சென்ற காலத்தில், ஆதாரக் கல்வி முறைக்கு மாற்றுகிறோம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்களைப் பாழாக்கிவிட்டது. கேட்டால் மாநில அலுவலர்களின் மேல் பழியைத் துரக்கிப் போட்டுவிட்டது. “அதைப்போல், இதுவும் வெறும் பெருஞ்செலவாகுமே ஒழியப் பலன் இராதோ என்று அஞ்சுகிறேன்” என்ற கருத்தைத் தெரிவித்தார். அப்போது நான் குறுக்கிட்டேன். "அய்யா! முதன் முறையாக மைய அரசுக்கும், மாநில அரசுக்கும் கணக்குச் சொல்ல வேண்டிய ஒருவன் இந்தத் திட்டத்தில் சிக்கி உள்ளான். "அவனே நான். “இங்கே இணை ஆலோசகராக இந்த உழவர் எழுத்தறிவுத் திட்டத்தை ஆதரித்துப் பேசுகிற நானே சென்னை மாநிலத்தின் கல்வி இயக்குநர் ஆவேன். 'அய்ந்தாண்டு காலம் இங்கேயே இருப்பேன் என்கிற உறுதிப்பாடு இல்லை. “மாநிலத்துக்கே திரும்பிப் போய் உங்களுக்குக் கணக்கு சொல்ல நேரிடக்கூடும். “களத்தில் பட்டறிவு பெற்றுக்கொண்டு வந்தவன் என்ற முறையில் நான் தயக்கமின்றி இது தேவையானது நன்மையானது: முழுப்பலன் விளைவிக்கக்கூடியது; சாத்தியகூறு ஆனதும்கூட. எனவே உழவர் எழுத்தறிவுத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று மிகப் பரிந்துரைக்கிறேன்” என்று ஆணித்தரமாகப் பதில் உரைத்தேன். அடையாளம் கண்டு கொண்டார் அப்போது குழுத்தலைவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார். "நீங்கள்தானா பகலுணவுப் பள்ளிச் சீரமைப்பு போன்ற திட்டங்களைத் தொடங்கி செயல்படுத்தி, பதம்பூரீ விருது பெற்ற இயக்குநர்?' என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/652&oldid=788476" இலிருந்து மீள்விக்கப்பட்டது