உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 நினைவு அலைகள் நான் “ஆம்” என்று சொன்னதும் உழவர் எழுத்தறிவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டார். 1. ஆனால் சிறு மாற்றம் செய்தார். செயல் திட்டம் “இது ஐந்தாண்டுத் திட்டம், அந்தக் காலத்திற்குள் 100 மாவட்டங்களில் நடைமுறைக்கு இதைக் கொண்டு வர வேண்டும். முதல் ஆண்டில் 20 மாவட்டங்களை எடுத்துக்கொள்வது வகுத்தல் கணக்கு. “திட்டம் புதிதாக இருப்பதால், முதலாண்டில் 10 மாவட்டங்களில் மட்டுமே நடத்திப் பாருங்கள். “முதல் ஆண்டின் இறுதியில், ஒர் ஆய்வுக்குழுவை அனுப்பு வேர்ம்:அக் குழு சுற்றிப் பார்த்து, இதுபற்றி நிறைவான அறிக்கை கொடுத்தால், இரண்டாம் ஆண்டில் 30 மாவட்டங்களிலும் செயல்படுத்தலாம். + “மாவட்டங்களைத் தேர்ந்து எடுப்பது கல்வி அமைச்சகத்தின் பொறுப்பாகும்” என்று இறுதி வடிவம் கொடுத்தார். குழு இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று ஊராட்சி ஒன்றியங் களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஒன்றியத்தில் 30 உழவர் எழுத்தறிவு மையங்களைத் திறக்க வேண்டும். ஒவ்வொரு மையத்திற்கும் வயது வந்தோரில் இருபது பேர்களையாவது சேர்க்க வேண்டும். ஒவ்வொரு பயிற்சியும் ஆறு திங்களுக்குத் தொடர்ந்து நடக்கும். அம் மையங்கள் திங்களுக்கு இருபது நாள்கள் வேலை செய்யும். நாளைக்கு ஒன்றரை மணி நேரம் அம் மையங்கள் வேலை செய்ய வேண்டும். * - அந்த ஒன்றரை மணி நேரத்தில் அரைமணிநேரத்தை உழவு பற்றிய வானொலி உரைகளைக் கேட்பதற்கு ஒதுக்க வேண்டும். மையத்தின் வேலை நேரம் எப்போது தொடங்கும் என்பதை அது கற்போர், கற்பிப்போர் ஆகியோரின் வசதிக்கேற்ப முடிவு செய்யப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/653&oldid=788477" இலிருந்து மீள்விக்கப்பட்டது