உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

635 நினைவு அலைகள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா புது தில்லிக்கு வந்தார். அவரைப் பேட்டி கண்டேன். உழவர் எழுத்தறிவுத் திட்டத்தை ஒப்புக்கொள்ளும்படி முதல்வரை வேண்டிக் கொண்டேன். “கரும்பு தின்னக் கூலி வேண்டுமா? இப்படி ஒரு திட்டம் மிகத் தேவை. முழுக்க முழுக்க இந்திய அரசே செலவை ஏற்றுக் கொள்ளும்போது அத் திட்டத்தை மகிழ்ச்சியோடு நடைமுறைப் படுத்தலாம். m “நம் மாநிலத்தில் இதைச் செயல்படுத்துகிறேன்” என்று கூறிய முதலமைச்சர், தனது தனிச்செயலராகிய திரு. சொக்கலிங்கத்தை அழைத்தார். "இந்திய அரசின் உழவர் எழுத்தறிவுத் திட்டத்தைச் சென்னை மாநிலம் ஏற்றுக் கொள்வதாக நாளை சென்னைக்குத் திரும்பியதும் இந்தியக் கல்வி அமைச்சகத்துக்குத் தந்தி அனுப்ப வேண்டும். இதைக் குறித்துக் கொள்ளுங்கள்”என்று கட்டளையிட்டார். என்னைப் பார்த்து, "இந்திய அரசின் திட்டம் ஆறு திங்கள் திட்டமாகும். அடிப்படை எழுத்தறிவையும், எண்ண அறிவையும் கற்றுத்தர நான்கு திங்கள் போதுமென்பது எனது கருத்து. “சில பகுதிகளில் ஆறு திங்கள் திட்டத்தை நடைமுறைப் படுத்துவோம். “வேறு சில ஒன்றியங்களில் நான்கு திங்கள் திட்டமொன்றைச் செயல்படுத்திப் பார்ப்போம். “அதற்கான செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்றுக் கொள்ளலாம். 'குறுகிய காலத் திட்டம், போதிய எழுத்து அறிவைக் கொடுத்தால் அதை மாநிலம் முழுவதற்கும் விரிவுபடுத்துவோம்” "காமராசருக்குப் பாராட்டு நமக்குள் பேசிக் கொள்கிறோம். வெளியில் மேடையிலோ, ஏட்டிலோ ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நம் மாநில இளைஞர்களுக்கு அறிவுக் கண்ணைத் திறந்தவர் காமராசரே! அவ் வசதிகளை நல்லபடி நான் கட்டிக் காக்கிறேன் என்பது மட்டும் எனக்குப் பெருமை சேர்த்துவிடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/655&oldid=788479" இலிருந்து மீள்விக்கப்பட்டது