பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணா மாநிலப் பணிக்கு அழைத்தார் 637 “என் கட்சிக்கு வாக்களித்தவர்களில் நூற்றுக்குத் தொண்ணுாறு பேர் கை நாட்டுகள். "அவர்களுக்கும் ஏதாவது செய்துவிட்டுத்தான் மீண்டும் அவர்களிடம் வாக்கு கேட்க வேண்டும். "தற்குறித் தன்மையைப் போக்குவதற்கு மாநிலம் தழுவிய நடவடிக்கைகளை எடுக்க விரும்புகிறேன். = - அன்பழைப்பு: மாநிலப் பணிக்கு வாருங்கள் 'நீங்கள் இந்திய அரசுக்கு வந்து ஈராண்டுக் காலம் சில திங்களில் முடிவடையப் போகிறதாகக் கேள்விப்பட்டேன். "மாநில அரசுப் பணியிலும் ஒய்வு வயதை 58 ஆக உயர்த்தி இருக்கிறேன். 'எனவே, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஈராண்டு காலம் முடிந்ததும் சென்னை அலுவலுக்கே திரும்பி வந்து விடுங்கள். “முதியோர் எழுத்தறிவு இயக்கத்தை மாநிலம் தழுவி நடத்த வாருங்கள். "அப்படி வந்தால் முதியோர் கல்விக்காக நீங்களே பாடநூல் எழுதுங்கள். அதைப் பயன்படுத்துவோம்” என்று முதலமைச்சர் எனக்கு ஆணையிட்டார். "நான் இப்போதும் சென்னை மாநில அலுவலரே! என்னைத் திருப்பி அழைத்துக் கொள்ளத் தங்களுக்கு உரிமை உண்டு. அப்படி அழைக்க விரும்புகிறீர்களா?” என்று நான் கேட்டேன். “தேவைப்பட்டால் திருப்பி அழைத்துக் கொள்ளலாம். == "ஆனால் அப்படிச் செய்தால், தி.மு.க. அரசு இந்திய அரசோடு ஒத்துழைக்கவில்லை என்று அவதூறு சொல்லக்கூடும். 'எனவே குறிப்பிட்ட ஈராண்டுக் காலம் முடிந்ததும் சென்னைக்கே திரும்பிப்போக விரும்புவதாக நீங்களே இந்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துவிட்டால் நன்றாய் இருக்கும் என்று தோன்றுகிறது! "அப்படிச் செய்வதில் உங்களுக்கு ஏதாவது சங்கடம் ண்டா?” என்று முதலமைச்சர் கேட்டார். “தாங்கள் விரும்பியபடி எழுதிக் கொடுத்துவிடச் த்ெதமாயிருக்கிறேன்” என்று பதில் உரைத்தேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/656&oldid=788480" இலிருந்து மீள்விக்கப்பட்டது