பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 நினைவு அலைகள் காமராசர் திட்டத்தின் பலன் “தமிழ்நாட்டில் காமராசர் கல்வி மடையைத் திறந்து விட்டதின் நல்ல பலனை முழுமையாக நான் அமெரிக்க நாட்டில்தான் உணர்ந்தேன். “முன்பெல்லாம், நகரங்களில் வாழும் பரம்பரைப் படிப் பாளிகளின் பிள்ளைகளும் பெண்களும்தான் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கவோ, பணி புரியவோ செய்வார்கள். “இப்போது நிலைமை மாறிவிட்டது. முதல் தலைமுறைப் படிப்பாளிகள் கூட அதுவும் நாட்டுப்புறங்களில் இருந்து வந்த தமிழர்களும் அமெரிக்க நாட்டில் பல ஊர்களில் கல்வி கற்பதையும், பணிபுரிவதையும் கண்டு உணர்ந்து மகிழ்ந்தேன். அண்ணா என்மீது வைத்த நம்பிக்கை “இக் கல்விப் பெருக்கை அப்படியே காப்பாற்றி, மாணவர்கள் மாணவர்களாகவே செயல்படும்படி பார்த்துக் கொள்வோமானால், பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் தகராறுகள் கூர் மழுங்கிவிடும். “மாணவர்களைத் தீவிர அரசியலில் தள்ளாமல் காப்பதற்குப் பொதுமக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டும். “இன்று தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைவரும், இTதTவது ஒரு அரசியல் கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக விளங்குகிறார்கள். "அந்நிலையில் நடுநிலைமையாளர்கள் சிலராவது, கல்வியை அரசியல் பிடியில் இருந்து மீட்கப் பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். o “ஏற்கெனவே நீங்கள் பொதுக்கல்வி இயக்குநராக அதைச் செய்து வந்தீர்கள். பொதுமக்களும் உங்களுடைய அரசியல் சார் பின்மையை வரவேற்று உங்கள் சொல்லுக்குச் செவிசாய்த்தார்கள். “நீங்கள் சென்னைக்குத் திரும்பினால், மீண்டும் அதே கருத்தைச் சொல்லிப் பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட முடியும். "அப்படியொரு கருத்து உருவானால் 1958இல் சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய, ஆசிரியர்களும் மாணவர்களும் தீவிர அரசியலில் ஈடுபடாக் கொள்கையைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கச் சாதகமாகும்” என்று முதலமைச்சர் கூறினார். முதலமைச்சர் என்பால் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்ததை வெளிப்படுத்தியபோது புளகாங்கிதம் அடைந்தேன். பரவசத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/657&oldid=788481" இலிருந்து மீள்விக்கப்பட்டது