உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணா மாநிலப் பணிக்கு அழைத்தார் 539 “நாளையே எழுதிக் கொடுத்து விடுகிறேன். சில திங்களில் சென்னைக்கு வந்துவிடுகிறேன்” என்று பதிலுரைத்துவிட்டு முதலமைச்சரிடம் விடைபெற்றுக் கொண்டேன். நான் வெளியே வரும்போது அண்ணாவோடு இருந்த இரு தி. மு. க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன் வந்தனர். என்னைத் தாழ்வாரத்தில் நிறுத்தி, “அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளக் கூச்சப்படுகிறீர்களே! “இப்போதும் காலம் கடந்துவிட வில்லை. நீங்கள் எங்களோடு வாருங்கள. “உங்களை மீண்டும் பொதுக்கல்வி இயக்குநராகவே நியமிக்கும்படி கேட்டுக் கொள்ளுங்கள். முதலமைச்சர் அப்படியே செய்துவிடுவார்” என்று என்பால் கொண்ட அன்பால் ஆலோசனை கூறினார்கள். “நான் பேரம் பேச விரும்பவில்லை. “அறிஞர் அண்ணா என்பால் வைத்துள்ள நம்பிக்கையே, எல்லாப் பதவிகளிலும் சிறந்தது. - = m. = ■ היה LE , “நான் எதையும் கேட்க விரும்பவில்லை எனறு அவர்களுக்குப் பதில் கூறினேன். அவர்கள் என்ன செய்வார்கள்? மதியழகனின் மனந்திறந்த பாராட்டு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா என்னைச் சென்னைக்குத் திரும்பி வந்துவிடும்படி அழைப்பதற்கு முன்பு, அதுபற்றிக் காற்று வாக்கில் சில செய்திகள் எட்டின. ஒருநாள், இன்றைய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக விளங்கும் திரு. கி. வீரமணி அவர்களிடமிருந்து பொதுப்படையாக ஒரு கடிதம் வந்தது. அதில், தமிழக அரசு என்னைச் சென்னை அரசுப் பணிக்கே அழைக்குமாயின், அதை மறுக்காது ஒப்புக்கொள்ளும்படி தந்தை பெரியார் விரும்புவதாக எழுதியிருந்தார். சட்டமன்றப் பேரவைத் தலைவர்கள் கூட்டத்திற்கு வந்த மாண்புமிகு புலவர் கோவிந்தன் அவர்களை, நான் புதுதில்லியில் தற்செயலாகக் காண நேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/658&oldid=788482" இலிருந்து மீள்விக்கப்பட்டது