பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540_ - நினைவு அலைகள் அப்போது அவர், "இப்போதைக்கு இச் செய்தி உங்களோடு இருக்கட்டும். முதலமைச்சர் அண்ணா, உங்களைச் சென்னைக்குத் திருப்பி அழைத்துக் கொள்ளப் போகிறார்” என்று புலவர் கோவிந்தன் என்னிடம் கூறினார். சில நாள்களுக்குப் பின், நிதி அமைச்சர் மாண்புமிகு கே. ஏ. மதியழகன் அலுவல் பற்றிப் புதுதில்லிக்கு வந்திருந்தார். அவரையும் எதிர்பாராத வகையில் நான் காண நேர்ந்தது. அவர் அன்போடும் பரிவோடும் மதிப்போடும் என்னிடம் நடந்து கொண்டார். 'ஆண்டுக்குப் பன்னிரண்டு கோடி ரூபாய் கல்விக்குச் செலவு செய்த காலத்தில், நீங்கள் பொதுக்கல்வி இயக்குநர் பதவியை ஏற்றீர்கள். அவ் வொதுக்கீட்டை ஆண்டுக்கு ஆண்டு உயர்த்திக் கொண்டே வந்து நாற்பத்தாறு கோடிக்கு உயர்த்திவிட்டீர்கள். எங்கும் கல்விச் சிந்தனை "நீங்கள் பொதுக்கல்வி இயக்குநராக இருந்தபோது, எங்கும் கல்வி பற்றிய பேச்சாகவே இருந்தது. படிக்காத பாமரர்கூட கல்விக்கு ஆதரவாகப் பேசினார்கள். செய்தித் தாள்களைப் புரட்டினால், கல்வி பற்றிய கருத்துகளே கண்களைக் கவரும். இவ்வளவுக்கும் காரணம் நீங்களே. 4ங் நாள்தோறும் நான்கைந்து கூட்டங்களிலாவது கல்வி பற்றிப் பேசிக் கொண்டு இருந்தீர்கள். பொதுமக்களுக்கும் புரியும்படி எடுத்துரைத்தீர்கள். பொதுமக்கள் கவனத்தைக் கல்வியின்பால் ஈர்த்தீர்கள். 'இப்போது நம் அரசு கல்விக்காக எண்பத்தாறு கோடி ரூபாய் செலவு செய்கிறது; இருப்பினும் கல்வித்துறை என்று ஒன்று இருப்பதையே பொதுமக்கள் மறந்துவிட்டார்கள். 'இந்நிலை மேலும் மோசமாவதற்குமுன், ஏதாவது மாற்று செய்ய வேண்டும், என்று முதலமைச்சர் அண்ணா முடிவு செய்துள்ளார். அதற்கு அமைச்சரவையும் இசைவு தந்துள்ளது. உங்களையே சென்னைக்குத் திரும்பி வந்துவிடும்படி அழைக்கக்கூடும்” என்று மாண்புமிகு மதியழகன் என்னிடம் காதும் காதும் வைத்தாற்போல் கூறினார். 1968ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாரிசு நகரில் 'யுனெஸ்கோ அலுவலகத்தில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அக் கருத்தரங்கின் தலைப்பு, கல்வி நிலையங்களில் இன வேறுபாடுகளைக் களைதல்’ என்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/659&oldid=788483" இலிருந்து மீள்விக்கப்பட்டது