உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 நினைவு அலைகள் துணைவேந்தருக்கு நேர்முகக் கடிதம் எழுதி அவ் வாண்டு மட்டும் காலம் கடந்து வந்தாலும் ஆய்ந்து பார்த்து ஒப்புதல் அளிக்கும்படி வேண்டினேன். அவ் வேண்டுகோள் பல்கலைக் கழக ஆட்சிக்குழுவின் ஆலோசனைக்கு வந்தது. “காலந்தவறி வந்திருப்பதால் அப்போது ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ள இயலாது” என்று மூத்த உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தினார். “இந்தச் சாக்கில் பாட நூல்களைப் பார்த்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்தால், பொதுமக்களிடம் ஒரு நெருக்கடி'யை உண்டாக்கிவிடுவோம். பல்கலைக் கழகம் தமிழுக்குப் பகையானது என்ற கெட்ட பெயரைக் கட்டிக் கொள்வோம். “இம்முறை மட்டும் காலக்கெடுவுக்கு விதிவிலக்கு அளித்து, தமிழில் வந்துள்ள நூல்களின் தகுதி பற்றி வல்லுநர்களின் மதிப்பீட்டைக் கேட்டுத் தெரிவியுங்கள். “குறை இருந்தால், அவற்றை நீக்கிப் பிழையறக்கொண்டு வருவதற்குப் போதிய காலம் கிட்டும்” என்று உறுதியாக வாதாடினேன். பல்கலைக் கழகம் நேசக்கரம் நீட்டியது. எந்தெந்த நூல் ஒப்புதல் பெறுகிறதோ, அந்தந்தப் பாடத்தைத் தமிழில் பயிற்றுவிக்க அரசு ஏற்பாடு செய்யலாம் என்று பல்கலைக் கழக ஆட்சிக் குழு முடிவு செய்தது. -- தமிழ் வென்றதாகப் பூரித்தேன். சில ஆண்டுகளில், 'உள்ளரிப்பின் மூலம் அந்நிலை மாறிவிடும்’ என்று அப்போது கனவுகூட காணவில்லை. கல்வி அமைச்சர் வியந்தார் தமிழில் வெளியிட்ட நூல்களின் பட்டியல், அவற்றின் ஆசிரியர்களின் பெயர்கள், ஒவ்வொருவருக்கும் வழங்கவேண்டிய நன்கொடை, ஆகியவற்றை அரசுக்கு அறிவித்தபோது, கல்வி அமைச்சர் நாவலர் வியப்பில் ஆழ்ந்தார். அந்நூல்களனைத்தும் பல்கலைக் கழகத்தால் பாட நூல்களாய் ஏற்கப்பட்டன. அவற்றிற்குப் பரிந்துரைத்த நன்கொடைகளோ பெரிதல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/667&oldid=788492" இலிருந்து மீள்விக்கப்பட்டது