உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணா மாநிலப் பணிக்கு அழைத்தார் 647 “வருகிற கையேட்டுப் பிரதிகளைப் படித்துப் பார்த்து, ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தது ஒரு நூலையாவது தேர்வு செய்து, அச்சடிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். பின்னர், பல்கலைக் கழகத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். ங்ங் தாங்கள் என்னிடம் தம்பிக்கை வைத்து, முழுப் பொறுப்பையும் ஒப்படைத்துவிடுவதானால், நான் பாட நூல்கள் வெளியிட ஏற்பாடு செய்கிறேன். “எனக்குத் தெரிந்த நம்பிக்கையான பேராசிரியர்களிடம் ஒவ்வொரு நூல் எழுதும் பணியை ஒப்படைத்துவிடுவேன். “அவரிடம் ஊதியம் பற்றிப் பேசி முடிவு செய்யும் உரிமையும் எனக்கு வேண்டும். “அரசு அச்சகம் ஒன்றையே நம்பி இராமல், பல அச்சகங் களிடம் அச்சிடும் பொறுப்பைக் கொடுத்துவிட்டால், மேற்படி பணி காலாகாலத்தில் நிறைவேறும்” என்று கல்வி அமைச்சருக்கு ஆலோசனை கூறினேன். என்னுடைய விருப்பு வெறுப்பின்மையையும் நேர்மையையும் செயல்திறனையும் அறிந்த கல்வி அமைச்சர், மேற்படி ஆலோசனையை ஏற்றுக் கொண்டார். “தொகை குறிப்பிடாத காசோலையைத் தருகிறேன். நீங்கள் உரிய நேரத்தில் நூல்கள் வெளிவரவும் ஒப்புதல் பெறவும், பட்டப் படிப்பில் தமிழ் பயிற்று மொழியாகவும் ஏற்பாடு செய்துவிடுங்கள்” என்று கட்டளை இட்டார். முடித்துக் காட்டினேன் நான் உடனே ஆவன செய்யத் தொடங்கினேன். நூலாசிரியர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை அழைத்துப் பேசினேன். மேற்கூறிய பணியை முடித்துக் கொடுக்கக் காலவரம்பு குறிப்பிட்டேன். அப் பேராசிரியர் யாரும் என்னைக் கைவிடவில்லை. உரிய காலத்தில் கையேட்டுப் பிரதிகள் வந்து சேர்ந்தன. அதற்கான 'நன்கொடைகளை (ஊதியம்) நேருக்கு நேர் பேசி முடிவு செய்தேன். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தடங்கல் தேவையான நூல்கள் அனைத்தும் வெளிவந்தன அவற்றைச் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/666&oldid=788491" இலிருந்து மீள்விக்கப்பட்டது