உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646 நினைவு அலைகள் இதுபற்றி மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் முதலமைச்சர் மாண்புமிகு அண்ணாவுக்கு ஒரு நேர்முகக் கடிதம் எழுதி ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தார். மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதில் சற்று கால தாமதம் ஆயிற்று. மருத்துவம் செய்துகொள்ள அமெரிக்க நாட்டிற்குப் புறப்பட இருந்த நாளன்று, முதலமைச்சர் இதுபற்றிக் கல்வி அமைச்சருக்கு நினைவுபடுத்தினார். அவ் வேளை, நான் தற்செயலாகச் சென்னைப் பொது மருத்துவமனையின் முதலமைச்சர் தங்கியிருந்த அறைக்கு வெளியே கவலையோடு காத்துக் கொண்டிருந்தேன். அதை அறிந்த கல்வியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், என்னை அழைத்து என்னிடம் அக் கடிதத்தைக் கொடுத்து அது பற்றி விவரமாகப் பேசி ஆணை பெற்றுக் கொள்ளும்படி கட்டளையிட்டார். . அன்று மாலை, அறிஞர் அண்ணாவை அமெரிக்க நாட்டிற்கு வழியனுப்பி வைத்தோம். அங்கு மறுநாள் காலை, வேலையாக நாவலரைக் கண்டேன். என்ன செய்ய வேண்டுமென்று அவரது ஆணையைக் கேட்டேன். முடியுமா? "சட்டமன்றம், பட்டப்படிப்பையும் தமிழில் நடத்தச் சொல்லி இருக்கிறது. இப்பொழுதே நான்கு மாதங்கள் ஒடிவிட்டன. பாக்கியுள்ள சில திங்களில் பாட நூல்களை ஆயத்தம் செய்து வெளியிட்டுத் தமிழைப் பயிற்று மொழியாக்க முடியுமா? இதற்கு = ஆத H. = H == + வழி உண்டா?” என்று என்னிடம் கேட்டார். “பாட நூல்களை வெளியிட்டால் மட்டும் போதாது. அவற்றைச் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி ஒப்புதலும் பெற வேண்டும். - “எவ்வளவு வேலை இருப்பினும், முன்வைத்த காலைப் பின் வைக்கலாகாது. சும்மாயிருந்தால் பொதுமக்களின் துாற்றலுக்கு ஆளாக நேரிடும். “வழக்கப்படி செய்வது என்றால், செய்தித் தாள்களில் எந்தெந்தப் பாடநூல் தமிழில் தேவையென்று விளம்பரப்படுத்த வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/665&oldid=788490" இலிருந்து மீள்விக்கப்பட்டது