உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணா மாநிலப் பணிக்கு அழைத்தார் 545 அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர்கள் அண்ணாமலை பல்கலைக் கழகப் பணித் தேர்வு ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும்படி இணைவேந்தர் என்ற முறையில் செட்டிநாட்டரசர் சர். எம். ஏ. முத்தைய செட்டியார் என்னை அழைத்தார். கல்வி அமைச்சரிடமும் முதலமைச்சரிடமும் அதைத் தெரிவித்தேன். அவர்கள் இருவரின் ஒப்புதலோடு அந்தப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். சில நாள்களில் முறையீடு ஒன்று என் காதுக்கு எட்டிற்று. பன்னிரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் ஆசிரியர்களின் நியமனம் தற்காலிகமாகவே தொடர்கிறது என்பது முறையீடு. “இது உண்மையா?” என்று ஆணையத்தின் கூட்டத்தில் கேட்டேன். “ஆம்” என்று பதில் வந்தது. 'நியமித்த காலத்தில் யார் யாருக்குப் போதிய தகுதி இருந்ததோ, அவர்களை (குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லாமலிருந்தால்) முறைப்படி நியமிக்கலாம்’ என்ற கொள்கையை, ஆணையத்தின் முன் வைத்தேன். அக் கொள்கை ஒப்புக் கொள்ளப்பட்டது. தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 120க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பலநிலை நியமனங்கள், முறைப்படுத்தப்பட்டன. அப் பல்கலைக் கழக ஆசிரியர் சமுதாயத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. 1968ஆம் ஆண்டு ஜூலை திங்கள்முதல் ஐந்து கல்லூரிகள் தவிர மற்ற அரசு கல்லூரிகளில் புகுமுக வகுப்பில் தமிழைப் பயிற்று மொழியாகக் கைக்கொள்வது என்று சென்னைச் சட்ட மன்றம் முடிவு செய்தது. அதன்படி, தமிழ் பயிற்று மொழியாக்கப்பட்டது. புகுமுக வகுப்பில் தமிழ் வழிப் பயிற்சி - பாட நூல்கள் தயாரிப்பு எனவே 1969இல் பட்ட வகுப்புக்குத் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும். அதற்கான பாட நூல்களைத் தமிழில் வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/664&oldid=788489" இலிருந்து மீள்விக்கப்பட்டது