பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 நினைவு அலைகள் து.ாங்கக்கூடும். இப் போதைக்கு நான் அதைக் கண்டும் காணாததுபோல் பாவனை செய்வேன். “எனவே, அரசுக்கு அவகாசம் கொடுப்பதற்காக ஒரு திங்கள் விடுப்பு எடுக்கச் சொல்கிறேன். 'அதற்குள் ஆணை பிறப்பிக்க முடிந்துவிட்டால், விடுப்பின் பகுதியை ரத்து செய்துகொள்ளலாம்.” - இதுவே முதலமைச்சர் எனக்கு இட்ட கட்டளை ஆகும். முதலமைச்சர் ஆணையிட்டபடி இந்திய அரசுப் பணியிலிருந்து விடுவித்துக் கொண்டதும், ஒரு திங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டேன். அவ் விடுப்பின்போது, சென்னைக்குத் திரும்பினேன். முதலமைச்சரிடம் தெரிவித்தேன். என்னைச் சென்னை மாநில அரசின் தலைமைக் கல்வி ஆலோசகராகவும், மற்றும் கூடுதல் செயலராகவும், உயர்கல்வி, பொது நூலகம், முதியோர் கல்வி ஆகியவற்றின் இயக்குநராகவும் நியமித்து ஆணை பிறப்பித்தார். காலையில், துங்கம்பாக்கம் கல்வி இயக்ககத்தில் அலுவல் பார்த்தேன். பிற்பகலில் கோட்டை கல்விச் செயலகத்தில் அலுவல் பார்த்தேன். சம்பளம் எவ்வளவு? ஆலோசகர் என்ற முறையில் 2000 ருபாயும், கூடுதல் செயலர் என்ற முறையில் 250 ரூபாய் தனிப்படியும் கொடுக்க அரசு ஆணையிட்டது. இதைப் பற்றிய இரகசியத்தைப் பின்னர்க் கேள்விப்பட்டேன். நான் சென்னைப் பணிக்கு வர ஒப்புக்கொண்டதும் இந்தியக் கல்விச் செயலகத்தில் அலுவல் பார்த்த திரு. சம்பத் என்பவர் வழியாக, என்னுடைய மொத்த ஊதியம் எவ்வளவு என்று அண்ணா தெரிந்துகொண்டார். அதில் ஒரு காசும் குறைக்கக்கூடாதுஎன்று முதலமைச்சர் முடிவெடுத்து அதற்கேற்ப சம்பளத்தையும், படியையும் முடிவு செய்தார்? அவருடைய பேருள்ளத்துக்கு எப்படி நன்றி செலுத்துவது? நான் தலைமைக் கல்வி ஆலோசகராகச் சேர்ந்த சில வாரங்களுக்குள் எனக்கு அழைப்பு ஒன்று வந்தது. அது என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/663&oldid=788488" இலிருந்து மீள்விக்கப்பட்டது