உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணா மாநிலப் பணிக்கு அழைத்தார் 643 மீண்டும் பொற்காலம் முதலமைச்சர் அண்ணாவிடம் நான் முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டதைப் பற்றிக் கூறியபோது, அவர் சொன்ன சுவையான நிகழ்ச்சியும், இட்ட கட்டளையும், நினைவுக்கு வருகின்றன. "நாம் சென்றமுறை இங்குக் கண்டு பேசியபின், அரூர் முத்து விட்டுத் திருமணத்துக்குச் சென்றேன். அத் திருமணத்தில், தந்தை பெரியாரும் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், நெ. து. சு. சென்னைக்குத் திரும்பி வர ஒப்புக் கொண்டார் என்ற தகவலைத் தெரிவித்தேன். பெரியார் பூரித்துப் போனார். அவருக்குக் கொள்ளை மகிழ்ச்சி. “அன்று மாலை அரூரில் பொதுகூட்டம். தந்தை பெரியாரும், நானும் உரையாற்றினோம். தந்தை பெரியார் தமது சொற் பொழிவில், முதலமைச்சர் ஒரு நல்ல மகிழ்ச்சியான செய்தியை இன்று சொன்னார்’ என்று சொல்லத் தொடங்கினார். “உங்கள் வேலை பற்றியிருக்கும் என்று சந்தேகப்பட்டேன். எனவே, பெரியாரின் சொக்காயைப் பிடித்து இழுத்தேன். பெரியார் புரிந்து கொண்டார். முதலமைச்சர் என் சட்டையைப் பிடித்து இழுக்கிறார். அதற்குப் பொருள் அவர் சொன்ன செய்தி இன்னும் இரகசியந்தான். அதற்குள் வெளியிடக்கூடாது என்று புரிந்துகொள்கிறேன். சென்னை மாநிலத்துக்கு மீண்டும் பொற்காலம் வருகிறது என்று மட்டும் இப்போதைக்குச் சொல்கிறேன்’ என்று தெரிவித்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தார். “அதிலிருந்து நீங்கள் சென்னைக்கு வந்து கல்விப் பொறுப்பை ஏற்றக் கொள்வதைப் பெரியார் எவ்வளவு வரவேற்கிறார் என்பதை உனர்ந்து கொண்டேன்” என்று முதலமைச்சர் தெரிவித்தார். முதல்வரின் ஆணை முதலமைச்சர் இட்ட கட்டளை என்ன? “பெரியாரைப் போல, உங்களுக்கும் விடுப்பு, ஒய்வு என்பவை தண்டனைகளாகத் தோன்றும். வேலை செய்து கொண்டிருந்தால்தான் உறக்கம் வரும். “உங்கள் நீண்ட பனிக் காலத்தில் நீங்கள் விடுப்பில் சென்றது அரிது. ஆனால், இம் முறை, தில்லிப் பதவியை விட்டதும் ஒரு திங்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். “உங்களை மாநில அரசுப் பணியில் நியமிக்கத் துரிதப்படுத்துவேன். இருப்பினும் இங்கும் அங்கும் கோப்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/662&oldid=788487" இலிருந்து மீள்விக்கப்பட்டது