பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியோர் கல்வித் திட்டம் 551 அக் குடும்பத்தில் கணவன், மனைவி, மகன், மகள் ஆகிய நால்வர் இடம் பெற்றனர். கணவனும், மனைவியும் தங்கள் உழவுத் தொழிலைச் செம்மையாகச் செய்ததோடு ஒருவர் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகவும், ஒருவர் கூட்டுறவுக் கழக உறுப்பினராகவும் செயல்பட்டனர். அப்போது அரசால் பரப்பப்பட்டு வந்த ஐ. ஆர். 8, வீரிய மக்காச்சோளம் ஆகிய இரண்டையும் பயிரிடும் முறைகளை நூலில் சேர்த்தேன். == அதுபற்றிய எல்லா விவரங்களையும் வேளாண்மைத்துறை வல்லுநர்கள் துல்லியமாகத் தகவல்கள் கொடுத்து உதவினார்கள். அக் குடும்பத்தின் பையனும் பெண்ணும் ஒழுங்காகச் சீருடையில் பள்ளிக்குச் செல்வதை அக் கதை காட்டிற்று. ‘விடுதலை நாள்', 'திருவள்ளுவர் திருநாள் ஆகியவற்றைப் பள்ளியில் கொண்ட்ாடும் சிறப்பையும் அந் நூலில் சேர்த்து இருந்தேன். பயிர்த்தொழிலில் போடும் விதை, இடும் உரம், கிடைக்கும் வெள்ளாமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்குப் பாடங்களை உருவாக்கினேன். -- சிறப்பாக, நிறைவாகப் பயன்படும் வகையில் வாழ்ந்த அந்தக் குடும்பக் கதையை முடித்த பிறகு, பயன்படுத்திய சொற்களை எண்ணிப் பார்த்தேன். __ அவை 312ஆக இருந்தன. செதுக்கிய சிலைபோல அந் நூல் அமைந்ததால், வலிந்து கூடுதலாகச் சொற்களைச் சேர்க்கவில்லை. அப் பாடநூலுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் நல்ல படம் ஒன்று சேர்க்கப்பட்டது. - - எழுத்துகள், கொட்டை எழுத்துகளாக இருந்தன. பொருட்செலவைப் பாராமல் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அந் நூலை அச்சிட அரசு எனக்க உரிமை கொடுத்தது. அதை அச்சிட்டுப் பயன்படுத்தினேன். உடுமலைப்பேட்டை வட்டத்தில், எந்தெந்த ஊரில் உழவர் எழுத்தறிவு மையத்தைத் தொடங்குவது என்பதைச் சென்னை இயக்ககத்தில் இருந்துகொண்டு முடிவு செய்யவில்லை. அந்தப் பகுதி அலுவலர்கள் பேரில் பொறுப்பைச் சுமத்திவிட்டுச் சும்மா இருந்துவிடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/670&oldid=788496" இலிருந்து மீள்விக்கப்பட்டது