பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652 நினைவு அலைகள் செயல்திட்டம் வகுத்தோம் - முன்னதாகக் குறிப்பிட்ட நாளில் உடுமலைப்பேட்டையில் மூன் று ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஆணையர்கள், பல நிலைக் கல்வி அலுவலர்கள் ஆகியவர்களுடன் நான் உட்கார்ந்து பேசி ஊர்களை முடிவு செய்தேன். அப்படி ஊர்களைத் தேர்ந்தெடுக்கச் சில அளவுகோல்களைப் பயன்படுத்தினோம். முதல் அளவுகோல், வயது வந்தோர் போ திய எண்ணிக்கையில் இரவுப் பள்ளிக்கு வரக்கூடிய அளவு பெரிய ஊராக இருக்க வேண்டும். அடுத்த அளவுகோல், அவ் வூராரின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்கிற உறுதிப்பாடு ஆகும். ஊரார் ஒத்துழைப்புக்கு அறிகுறி என்ன? உள்ளுர்ப் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு, ஊர்ப் பொதுச் செலவில் நன்கொடையால் மின்விளக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். அதோடு மட்டுமில்லை. ஆறு திங்களுக்குச் செலவாகும் மின் கட்டணத்தையும் ஊராரே ஏற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக அவ் வூரில் உண்மையாகவே ஒர் ஆசிரியர் குடியிருக்க வேண்டும். அவ் வாசிரியர் ஆறு திங்களுக்காவது தொடர்ந்து அதே ஊரில் குடியிருக்கும் உறுதிப்பாடு தேவை.

  • ஆசிரியர் பகல் நேரப் பணிபுரியும் ஊரில் அல்லாது, குடியிருக்கும் ஊரில்தான் எழுத்தறிவு மையத்தை நடத்தவிடுவது என்று அன்று முடிவு செய்யப்பட்டது.

ஒன்றியத்துக்கு முப்பது ஊர்கள் வீதம், மூன்று ஒன்றியங் களுக்கும் 90 ஊர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. பொதுமக்களின் தலைவர்களை முன்னதாகவே கலந்து, ஊர்களைத் தேர்ந்து எடுத்ததால், எல்லா மையங்களும் டர்ப்பாடின்றிச் செம்மையாகவே இயங்கின. வேலை நேரம் கற்போர் வசதியை ஒட்டி அமைந்ததால் வருகைக்கும் குறைவில்லை. சிறு தொகையாயினும் நன்கொடை கொடுத்தவர்கள் சமயம் வாய்த்தபோது எல்லாம் முதியோர் கல்விக்கு ஆதரவாகப் பேசினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/671&oldid=788497" இலிருந்து மீள்விக்கப்பட்டது