உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியோர் கல்வித் திட்டம். 653 எனவே, எழுத்தறிவு மையத்துக்குச் சென்று கற்பது பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது. தக்க மனநிலையை உருவாக்கியதோடு, மையங்களில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, இருவார காலம் முன் பயிற்சி கொடுக்கப்பட்டது. புதிதாக வெளியிடப்பட்ட பாடநூலை வைத்துக்கொண்டே பயிற்சி பெற்றார்கள். பயிற்சியின் தொடக்க விழாவில், “இப்பாடநூல் வேதமல்ல; நம் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது திருத்திக் கொள்ளலாம். - "இயக்குநர் எழுதியதற்குத் திருத்தம் சொல்லலாமா என்று தயங்காதீர்கள். உங்கள் மனத்தில் படும் திருத்தங்களைச் சொல்லுங்கள். அவற்றை ஆலோசித்து சரியெனப்பட்டால் இரண்டாம் பதிப்பில் மாற்றிக் கொள்வோம்” என்று வேண்டிக் கொண்டேன். திருத்தம் , திருத்தம் சொன்னார்களா? சொன்னார்கள். நிறைவு விழாவிலும் நான் கலந்து கொண்டேன். அப்போது, கேள்விப்பட்ட, திருத்தம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு பாடத்தில், அவர் நல்லவர் என்று வந்தது. அதைச் சுட்டிக்காட்டி, இம் மாவட்டத்தில் நல்லவரைத் ‘தங்கமானவர் என்று சொல்வதே மரபு. எனவே, அப்படி மாற்றம் செய்யுங்கள் என்று அறிக்கையில் கூறினார்கள். i. -- அடுத்த பதிப்பில் மாற்றம் செய்வதாக வாக்களித்தேன். அதை நிறைவேற்றுவதற்குமுன், அரசுப் பணியிலிருந்து ஒய்வுபெறும் சூழ்நிலை உருவாயிற்று. 500 மையங்கள் “ஆறு திங்களுக்கான உழவர் எழுத்தறிவுத் திட்டத்தை நான்கு திங்களில் முடித்துவிட முடியும். அதைச் சோதனை செய்து பாருங்கள்” என்று முதலமைச்சர் அண்ணா வழி காட்டினார் அல்லவா? அதன்படி தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டொரு ஒன்றியங்களில் எழுத்தறிவு மையம் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/672&oldid=788498" இலிருந்து மீள்விக்கப்பட்டது