பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 நினைவு அலைகள் முன்னரே கூறிய அளவுக்கோல்க்ளைக் கொண்டு ஊர்கள் தேர்வு செய்யப்பட்டன.ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. 1969-70 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 500 உழவர் எழுத்தறிவு மையங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அப்படி ஒதுக்குகிறபோது, அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சராக விளங்கினார். H 1969 பிப்ரவரி மூன்றாம் நாள் நள்ளிரவுக்குபின், அறிஞர் அண்ணா மறைந்ததால், கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். - __ -- அவர் எழுத்தறிவு மையங்களுக்கு ஒதுக்கிய நிதியில் கைவைக்க வில்லை. அத் திட்டத்தைச் செயல்படுத்த ஆணை பிறப்பித்தார். திட்டமிட்டபடி 500 மையங்கள் செயல்பட்டன. எதிர்பார்த்தபடி வயது வந்தோர் பள்ளிக்கு வந்து எழுத்தறிவையும் எண்ணறிவையும் பெற்றனர். உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் கிடைத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு பிற மாவட்டங்களிலும் கிடைத்தது. * எனவே, அறிஞர் அண்ணா எதிர்பார்த்தபடி நான்கு திங்களில் 30 நாள்களில் அப் பாடத்திட்டத்தை நிறைவேற்ற முடிந்தது. பலன் எப்படி? சராசரி மையத்திற்கு 24 பேர்கள் தேர்வில் வெற்றி பெற்றனர். நூலக வளர்ச்சியில் என் பங்கு இந்திய அரசு முன்னரே குறிப்பிட்டபடி, ஆய்வுக் குழுவை அனுப்பியது. == - - அக் குழு உடுமலைப்பேட்டை மையங்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்து, நிறைவான அறிக்கையை அனுப்பியது. ■ கருகிய பயிர் மாநிலத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்களா? இல்லை. ஆரன்? அத் திட்டம் வெற்றிகரமாக நடந்தால் 1970-71இல் 5000 மையங்களில் எழுத்தறிவு ஊட்ட எண்ணியிருந்த அண்ணா மறைந்தார். நானும் புதிய பொறுப்புக்குச் செல்ல நேரிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/673&oldid=788499" இலிருந்து மீள்விக்கப்பட்டது