பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியோர் கல்வித் திட்டம் 555 எழுத்தறிவின் இன்றியமையாமையை எடுத்துக்கூறி, பெரிய அலுவலர்களோடு வாதாடி, வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்குமளவு போராட அலுவல்ர்கள் எவருமில்லை. எனவே, அத்திட்டம் முளையிலேயே கருகிவிட்டது. 5П5l வந்தார் - 1969 ஏப்ரலில் அரசுப் பணியில் இணைச்செயலராக இருந்த ஒருவர் என்னிடம் துாது வந்தார். - அமைச்சர்களில் ஒருவர் சார்பில் துரது வந்து இருப்பதாகக் கூறினார். கொண்டு வந்த செய்தி என்ன? 1. #. “சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் ஆகிய திரு. சைய்யத் யாகூப் தங்களுக்கு மிக நெருக்கமானவர் என்று அமைச்சர் கேள்விப்படுகிறார். “திரு. யாகூப், தங்கள் பேச்சைத் தட்டமாட்டாராம். அமைச்சருக்குச் சிறு உதவியொன்று தேவைப்படுகிறது. விவரத்தை அவரே நேரில் தங்களிடம் கூறுவார். “என்னைத்தங்கள் "நாடி’பார்த்து வரும்படி அனுப்பியுள்ளார். தாங்கள் தலையிட இசைந்தால், அவரிடம் சொல்லுகிறேன். அவர் தங்களிடம் தகவல்களைக் கொடுப்பார்” என்று தூது வந்தவர் தெரிவித்தார். “எத்தகைய உதவி என்று தெரிந்தால்தானே முடியுமா, முடியாதா என்று முடிவு சொல்ல இயலும்?” என்று நான் அவருக்குப் பதில் உரைத்தேன். “அமைச்சருக்கு வேண்டிய ஒருவர் சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வு ஒன்று எழுதியுள்ளார்.அதில் அவர் வெற்றி பெற உதவ வேண்டும்” என்று மெல்லிய குரலில் இணைச்செயலர் கூறினார்.

பொங்கியெழுந்த சினத்தை அடக்கிக் கொண்டு, “இத்தகைய உதவி செய்வதற்கு வேண்டிய பழக்கம் எனக்கு இல்லை. திரு. யாகூப்பும் தவறு செய்யமாட்டார். “எனவே, எங்களை மன்னிக்கும்படி அமைச்சரிடம் எங்கள் 'சார்பில் வேண்டிக் கொள்ளுங்கள்” என்று கூறினேன். இணைச்செயலரது முகம் ஏமாற்றத்தைக் காட்டிற்று, புன்சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டார். “இதுபற்றி மீண்டும் சிந்தித்தால் நன்றாக இருக்கும்” என்று அறிவுரை கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/674&oldid=788500" இலிருந்து மீள்விக்கப்பட்டது