உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

655 - நினைவு அலைகள் இரண்டொரு நாள்கள் சென்றன. பின்னர், குறிப்பிட்ட அமைச்சர் மேற்படி விவகாரத்தை என் காதில் போட்டார். தகாதன செய்ய முடியுமா? தகாதன செய்யும் மனப்பக்குவம் இருந்தால் ஏற்கெனவே செல்வாக்குள்ள இரு சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் கேட்டுக் கொண்டபடி அவர்கள் பிள்ளைகள் பள்ளியிறுதித் தேர்வில் வெற்றிபெற உதவியிருப் பேனே! 'குற்றவியல் பக்குவம் இன்மையால் அமைச்சரின் வேண்டுகோளை மறுத்துவிட்டேன். அறிஞர் அண்ணா நோய்வாய்ப்பட்டுச் சென்னைப் பொது மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பார்த்துக் கொண்டபோது நான் நாள்தோறும பல மணி நேரம் தாழ்வாரத்தில் ‘தவம்’ கிடந்தேன். -- பின்னர், நியூயார்க் சென்று மருத்துவம் செய்துகொண்டு, சென்னைக்குத் திரும்பியதை அனைவரும் அறிவர். சில வாரங்களுக்குப் பிறகு அண்ணா அடையர்று புற்றுநோய் மருத்துவமனையில் தங்கி மருத்துவம் செய்து கொண்டபோதும் காலை மாலை இரு வேளையும் அங்குச் சென்று காத்துக் கிடந்தேன். மணிக்கணக்கான ஏக்கத்தோடு நான் நின்று கொண்டே இருந்ததும் உண்டு. -- இத்தகைய பாச வெளிப்பாட்டிற்கு எவரும் குறை சொல்ல முடியாது. பல நாள் ஏக்கத்தால் தன் நிலை இழந்து இருந்தேன். அண்ணாவின் மறைவுச் செய்தி பேரிடியாக வந்தது. இரவு ஒன்றரை மணிக்கு அறநிலைய ஆணையர் திரு. ஏ இராதாகிருஷ்ணனும், நானும் துங்கம்பாக்கத்திலுள்ள அண்ணா வின் இல்லத்திற்குச் சென்று கண்ணிர் அஞ்சலி செலுத்தினோம். மறுநாள் பகல் முழுதும் இராஜாஜி மண்டபத்திலேயே இருந்தேன். அண்ணாவின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டபோதும் பேழைக்குப் பக்கத்தில் கண்ணிர் மழை பொழிந்து கொண்டு இருந்தேன். பின்னர் நாள் முழுவதும் வாடித் தவித்தேன். என்னைவிட அதிகமாகத் தந்தை பெரியார் வருந்தினார்கள். இதை உலகம் அறிவும். - -- o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/675&oldid=788501" இலிருந்து மீள்விக்கப்பட்டது